மாவட்ட செய்திகள்

பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் ரூ.1 லட்சம் போதைப்பொருள் வேனுடன் பறிமுதல் 2 பேர் கைது + "||" + Two suspects arrested with drug van in Pallikonda customs

பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் ரூ.1 லட்சம் போதைப்பொருள் வேனுடன் பறிமுதல் 2 பேர் கைது

பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் ரூ.1 லட்சம் போதைப்பொருள் வேனுடன் பறிமுதல் 2 பேர் கைது
பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் ரூ.1 லட்சம் போதைப்பொருள் வேனுடன் பறிமுதல் செய்யப்பட்டது. 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
அணைக்கட்டு,

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா சுங்கச் சாவடியில் நேற்று காலை துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையிலான தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் ஆயுதப்படை போலீசார் 5 பேர், மேலும் பள்ளிகொண்டா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வக்குமார், போலீசார் ராஜி, ரஞ்சித், முத்துக்குமார் ஆகியோர் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.


அப்போது ஆம்பூரில் இருந்து வேலூரை நோக்கி வேன் ஒன்று வந்தது. அந்த வேனின் முகப்பு கண்ணாடியில் காய்கறிகளை ஏற்றிச்செல்லும் வாகனம் என எழுதப்பட்டு இருந்தது. வேனில் போலீசார் சோதனைச் செய்தனர். அதில் முட்டைகோஸ், காலிபிளவர் மூட்டைகளுக்கு நடுவே மறைத்து 20 மூட்டைகளில் போதைப்பொருள் கடத்தி வரப்பட்டது கண்டு பிடிக்கப்பட்டது.

வேலூரை சேர்ந்தவர்கள்

போதைப் பொருட்கள், காய்கறி மூட்டைகளுடன் வேனை பள்ளிகொண்டா போலீசுக்கு அனுப்பி வைத்தனர். கடத்தி வரப்பட்ட போதைப் பொருளின் மதிப்பு ரூ.1 லட்சம் இருக்கும் எனக் கூறப்படுகிறது. கடத்தலில் ஈடுபட்டு வேனில் வந்தவர்கள் வேலூர் சைதாப்பேட்டை சின்ன அண்ணா மேஸ்திரி தெருவைச் சேர்ந்த இப்ராஹிம் (வயது 40), தேவராஜ்நகர் மாதாகோயில் தெருவைச் சேர்ந்த சையத்ஜாபர் (24) எனத் தெரிய வந்தது.

இதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து வேன், காய்கறிகள், போதைப் பொருள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தொடர்புடைய செய்திகள்

1. பல கோடி வரி ஏய்ப்பு; சென்னை, கடலூர் உள்ளிட்ட 16 இடங்களில் வருமான வரித்துறை சோதனை
ரூ.450 கோடி சொத்துகளை கணக்கில் காட்டாமல் வரி ஏய்ப்பு செய்த விவகாரமொன்றில் சென்னை, கடலூர் உள்ளிட்ட 16 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது.
2. கேரள தங்க கடத்தல் வழக்கு; என்.ஐ.ஏ. அதிகாரிகள் 5 இடங்களில் சோதனை
கேரள தங்க கடத்தல் வழக்கு தொடர்பாக மலப்புரம் மற்றும் கோழிக்கோடு மாவட்டங்களில் 5 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
3. தூத்துக்குடியில் தொழிலக பாதுகாப்பு அதிகாரி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ‘திடீர்’ சோதனை
தூத்துக்குடியில் தொழிலக பாதுகாப்பு அதிகாரி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று திடீர் சோதனை நடத்தினர். இதில் ரூ.64 ஆயிரம் மற்றும் இனிப்பு, பட்டாசு பார்சல்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
4. கோவில்பட்டி நகரில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கண்காணிப்பு வாகனத்தில் ரோந்து
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கோவில்பட்டியில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்காணிக்க வாகனத்தில் ரோந்து பணியை நேற்று போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தொடங்கி வைத்தார்.
5. மும்பையில் நடிகர் அர்ஜூன் ராம்பால் வீட்டில் போதைப்பொருள் சோதனை விசாரணைக்கு ஆஜராக சம்மன்
இந்தி நடிகர் அர்ஜூன் ராம்பால் வீட்டில் நேற்று போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அவரை விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் கொடுத்தனர்.

அதிகம் வாசிக்கப்பட்டவை