கோவில்பட்டியில் கடன் தொல்லையால் மருந்து விற்பனையாளர் தூக்குப்போட்டு தற்கொலை


கோவில்பட்டியில் கடன் தொல்லையால் மருந்து விற்பனையாளர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 8 May 2020 4:15 AM IST (Updated: 7 May 2020 11:42 PM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் கடன் தொல்லையால் மருந்து விற்பனையாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கோவில்பட்டி, 

கோவில்பட்டி பாரதி நகர் முதலாவது தெருவைச் சேர்ந்தவர் மரகதலிங்கம். இவருடைய மகன் மகாராஜன் (வயது 32). மருந்து மொத்த விற்பனையாளரான இவர் கோவில்பட்டி மெயின் ரோடு பகுதியில் ஏஜென்சி அலுவலகம் நடத்தி வந்தார். இவருடைய மனைவி செல்வலட்சுமி (26). இவர்களுக்கு மவுரிதரன் (4) என்ற மகன் உள்ளார்.

இந்த நிலையில் மகாராஜனுக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது. மேலும் அவர் கடன் தொல்லையால் அவதிப்பட்டார்.

இதனால் மனமுடைந்த மகாராஜன் நேற்று முன்தினம் இரவில் தனது அலுவலகத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

போலீசார் விசாரணை

நேற்று காலையில் அந்த ஏஜென்சி அலுவலகத்துக்கு சென்ற காவலாளி, அங்கு மகாராஜன் தூக்கில் பிணமாக தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் அய்யப்பன் மற்றும் போலீசார் விரைந்து சென்றனர். மகாராஜனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

கோவில்பட்டியில் கடன் தொல்லையால் மருந்து மொத்த விற்பனையாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story