பெத்தநாயக்கன்பாளையத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம்


பெத்தநாயக்கன்பாளையத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம்
x
தினத்தந்தி 8 May 2020 10:06 AM IST (Updated: 8 May 2020 10:06 AM IST)
t-max-icont-min-icon

பெத்தநாயக்கன்பாளையத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் நடந்தது.

பெத்தநாயக்கன்பாளையம்,

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மேலும் உள்ளாட்சி துறை மூலம் நோய் தடுப்பு பணிகள் நடைபெற்றுள்ளன. இந்த நிலையில் பெத்தநாயக்கன்பாளையத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமை தாங்கினார். இதில் பெத்தநாயக்கன்பாளையத்தில் உள்ள கிராமப்புற பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வருகிறதா? என்பது குறித்தும், ஆத்தூர் நகராட்சி பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க செய்யப்பட்ட ஏற்பாடுகள் குறித்தும் அமைச்சர் கேட்டறிந்தார். மேலும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசும் போது, தற்போதைய சூழ்நிலையில் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்க முறையாக துரித நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். எந்த விதத்திலும் பொதுமக்கள் பாதிக்கக்கூடாது என அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

கூட்டத்தில் தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன், சின்னதம்பி எம்.எல்.ஏ., ஊராட்சி முகமை திட்ட இயக்குனர் அருள்ஜோதி அரசன், நகராட்சிகளின் மண்டல இயக்குனர் அசோக்குமார், ஆத்தூர் உதவி கலெக்டர் துரை, சேலம் மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மோகன், தலைவாசல் ஒன்றிய குழு தலைவர் ராமசாமி, நரசிங்கபுரம் கூட்டுறவு சங்க தலைவர் மணிவண்ணன், பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றிய குழு துணைத்தலைவர் முருகேசன், பெத்தநாயக்கன்பாளையம் வடக்கு ஒன்றிய செயலாளர் மோகன் உள்பட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Next Story