ஈரோடு மாவட்டத்தில் எந்தெந்த கடைகள் செயல்படலாம்: கலெக்டர் சி.கதிரவன் தகவல்
ஈரோடு மாவட்டத்தில் எந்தெந்த கடைகள் செயல்படாலம் என்று கலெக்டர் சி.கதிரவன் தெரிவித்து உள்ளார்.
ஈரோடு,
ஈரோடு மாவட்டத்தில் எந்தெந்த கடைகள் செயல்படாலம் என்று கலெக்டர் சி.கதிரவன் தெரிவித்து உள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது:-
கொரோனா நோய்த்தொற்றை தடுப்பதற்காக மாநில பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ், ஊரடங்கு உத்திரவு வருகிற 17-ந்தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் ஹார்டுவேர், சிமெண்ட், உலோகக்கடைகள், கட்டுமான பொருட்கள், விளையாட்டு பொருட்கள், ஆட்டோ மொபைல், புத்தக விற்பனை நிலையம், சானிடரிவேர், மின்சாதன விற்பனைக்கடைகள்.
செல்போன், கணிப்பொறி, வீட்டு உபயோகப்பொருட்கள், மின் மோட்டார் பழுதுநீக்கும் கடை, கண் கண்ணாடி விற்பனை கடைகள், மளிகைக்கடை, மருந்து கடைகள், உணவகங்கள் (பார்சல் மட்டும்), ஸ்டுடியோ, இனிப்பு கடைகள், பேக்கரி, அச்சகங்கள், 2 மற்றும் 4 சக்கர வாகனங்கள் சர்வீஸ் சென்டர், இறைச்சிக்கடைகள் (வெளியில் இருந்து வெட்டி பேக் செய்ய வேண்டும்) ஆகிய கடைகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
ஏ.சி. நிறுவப்பட்ட கடைகள், நகைக்கடைகள், அனைத்து வகையான துணிக்கடைகள் மற்றும் துணி மார்க்கெட், டீக்கடை, குளிர்பான கடை, அழகு நிலையங்கள், சலூன், ஸ்பா, டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ஸ், மார்க்கெட் காம்ப்ளக்ஸ், உடற்பயிற்சி நிலையம், விளையாட்டு திடல், நீச்சல் குளம், திரையரங்குகள், தங்கும் விடுதி, மதுக்கூடங்கள், அருங்காட்சியகங்கள், பார்க், சுற்றுலாத்தலங்கள், 2 மற்றும் 4 சக்கர வாகன விற்பனை நிறுவனங்கள் ஆகியவை திறக்க தடை செய்யப்பட்டு உள்ளது. கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ள கடையின் உரிமையாளர் மற்றும் பணியாளர்கள் முகக்கவசம் அணிய வேண்டும். கடைக்கு வரும் வாடிக்கையாளர் சமூக இடைவெளியினை கடைபிடிக்கவும், முகக்கவசம் அணிவதை கடையின் உரிமையாளர் மற்றும் பணியாளர் உறுதி செய்ய வேண்டும். கடைக்கு வரும் வாடிக்கையாளர் மேற்படி நிபந்தனையை பின்பற்றாமல் இருந்தால் கடையின் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் கடையின் நுழைவுவாயிலில் சானிடைசர் மற்றும் சோப் போன்றவை கைகளை கழுவுவதற்காக வைக்கப்பட வேண்டும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் தெரிவித்து உள்ளார்.
Related Tags :
Next Story