மாவட்ட செய்திகள்

ஒடிசாவை சேர்ந்த 60 பேர் வேலூரில் இருந்து பஸ்கள் மூலம் சென்னைக்கு அனுப்பி வைப்பு + "||" + 60 people from Orissa sent in buses from Vellore to Chennai

ஒடிசாவை சேர்ந்த 60 பேர் வேலூரில் இருந்து பஸ்கள் மூலம் சென்னைக்கு அனுப்பி வைப்பு

ஒடிசாவை சேர்ந்த 60 பேர் வேலூரில் இருந்து பஸ்கள் மூலம் சென்னைக்கு அனுப்பி வைப்பு
ஒடிசாவை சேர்ந்த 60 பேர் வேலூரில் இருந்து பஸ்கள் மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
வேலூர், 

வேலூரில் உள்ள சி.எம்.சி. மருத்துவமனைக்கு பீகார், உத்தரபிரதேசம், ஜார்கண்ட், ஒடிசா போன்ற வடமாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கானவர்கள் சிகிச்சைக்காக வந்தனர். ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் அவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். மேலும் வேலூர் மாவட்டத்தில் வேலை செய்து வந்த வடமாநில தொழிலாளர்களும் ஊருக்கு செல்ல முடியாமல் இருந்தனர். இதையடுத்து, தமிழக அரசின் நடவடிக்கையால் அவர்கள் பல்வேறு கட்டங்களாக ரெயில் மற்றும் கார் மூலம் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் சென்னையில் இருந்து ஒடிசாவுக்கு ரெயில் செல்ல உள்ளது. எனவே வேலூரில் தங்கியுள்ள ஒடிசாவை சேர்ந்த 60 பேரை சென்னைக்கு அனுப்பி வைக்க மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்தது. அதன்படி நேற்று வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து 2 அரசு பஸ்கள் மூலம் 60 பேரும் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ஒடிசாவில் அதிரடி முக கவசம் அணியாவிட்டால் பெட்ரோல் கிடையாது
ஒடிசாவில் அனைத்து பெட்ரோல் நிலையங்களிலும் முக கவசம் அணிந்து வருபவர்களின் வாகனங்களுக்கு மட்டுமே பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
2. ஒடிசாவில் ஊரடங்கு 30-ந் தேதி வரை நீட்டிப்பு - முதல் மந்திரி நவீன் பட்நாயக் அறிவிப்பு
ஒடிசா மாநிலத்தில் ஊரடங்கு வருகிற 30-ந் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக முதல் மந்திரி நவீன் பட்நாயக் அறிவித்து உள்ளார்.
3. ஒடிசாவில் 4 வயது சிறுமி கற்பழிப்பு; தொழில் பாதுகாப்பு படை வீரர் கைது
ஒடிசாவில் 4 வயது சிறுமி கற்பழிப்பு சம்பவத்தில், தமிழகத்தைச் சேர்ந்த தொழில் பாதுகாப்பு படை வீரர் கைது செய்யப்பட்டார்.