மாவட்ட செய்திகள்

கல்குவாரி மீண்டும் செயல்பட தொடங்கியதற்கு எதிர்ப்பு: வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி கிராம மக்கள் போராட்டம் + "||" + Opposition to re-activation of Kalkwari: The struggle of villagers with black flags in their homes

கல்குவாரி மீண்டும் செயல்பட தொடங்கியதற்கு எதிர்ப்பு: வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி கிராம மக்கள் போராட்டம்

கல்குவாரி மீண்டும் செயல்பட தொடங்கியதற்கு எதிர்ப்பு: வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி கிராம மக்கள் போராட்டம்
கல்குவாரி மீண்டும் செயல்பட தொடங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து செ.புதூர் கிராம மக்கள், தங்கள் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டம் நடத்தினர்.
விக்கிரவாண்டி,

விக்கிரவாண்டி அருகே உள்ள செ.புதூர் கிராமத்தில் கல்குவாரி இயங்கி வருகிறது. இந்த குவாரியில் கடந்த பிப்ரவரி மாதம் 20-ந் தேதி 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மலையை வெடி வைத்து உடைக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது முட்டத்தூர் கிராமத்தை சேர்ந்த தொழிலாளி ராமகிருஷ்ணன் (வயது 45) என்பவர் கம்பிரசர் உதவியுடன் துளைபோட்டபோது கல் சரிந்து விழுந்ததில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.


இதுகுறித்த தகவல் அறிந்ததும் விழுப்புரம் கோட்டாட்சியர் ராஜேந்திரன், உதவி இயக்குனர் (கனிமவளம்) லட்சுமிப்பிரியா உள்ளிட்டோர் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் அந்த கல்குவாரி மூடப்பட்டது.

கருப்பு கொடி ஏற்றி போராட்டம்

இந்நிலையில் நேற்று முதல் மீண்டும் அந்த கல்குவாரி செயல்பட தொடங்கியது. சில தொழிலாளர்கள் அந்த கல் குவாரிக்கு வேலைக்கு சென்றனர். இதனை கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் முருகன் தலைமையில் அங்குள்ள கிராம மக்கள் 300-க்கும் மேற்பட்டோர் தங்கள் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையறிந்ததும் பெரியதச்சூர் போலீசார் அங்கு விரைந்து சென்று வீடுகளில் கட்டப்பட்ட கருப்புக்கொடிகளை அப்புறப்படுத்தினர். தொடர்ந்து, கிராம மக்களிடம் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, உங்கள் குறைகளை மாவட்ட நிர்வாகத்திடம் முறைப்படி தெரிவியுங்கள் என்று பொதுமக்களிடம் போலீசார் அறிவுறுத்தினர்.

இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், கல் குவாரி ஒப்பந்ததாரர் விதிமுறைகளை மீறி சக்திவாய்ந்த வெடி மருந்து பயன்படுத்தி பாறைகளை உடைப்பதன் மூலம் வீடுகளின் சுவர்களில் விரிசல் ஏற்பட்டு பாதுகாப்பாக வாழ முடியாத நிலை உள்ளது. எனவே விதிமுறையை மீறி செயல்படும் கல் குவாரியின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும், எங்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

தொடர்புடைய செய்திகள்

1. காவலில் கருப்பர் பலியால் போராட்டம் வலுக்கிறது: அமெரிக்காவில் போலீஸ் நிலையத்துக்கு தீ
அமெரிக்காவில் காவலில் இருந்த கருப்பர் பலியானதால், போராட்டம் வலுத்து வருகிறது. மேலும் போலீஸ் நிலையத்துக்கு தீ வைக்கப்பட்டது.
2. முடி திருத்தும் தொழிலாளர்கள் போராட்டம்
நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் குறிப்பிட்ட நேரம் சலூன் கடைகளை திறக்க அனுமதி கோரி முடி திருத்தும் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
3. சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு வடமாநில தொழிலாளர்கள் போராட்டம்
சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க கோரி சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட வடமாநில தொழிலாளர்கள் ஓட்டம் பிடித்தனர். அவர்களை போலீசார் விரட்டிச்சென்று பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
4. தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு: புதுவையில் மின்துறை ஊழியர்கள் போராட்டம்
தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரி ஊழியர்கள் பணிகளை புறக்கணித்து நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
5. கண்களில் கருப்பு துணி கட்டி பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் போராட்டம்
கண்களில் கருப்பு துணி கட்டி பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் போராட்டம்.