மராட்டியத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 20 ஆயிரத்தை தாண்டியது - ஒரே நாளில் 48 பேர் பலி


மராட்டியத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 20 ஆயிரத்தை தாண்டியது - ஒரே நாளில் 48 பேர் பலி
x
தினத்தந்தி 10 May 2020 4:52 AM IST (Updated: 10 May 2020 4:52 AM IST)
t-max-icont-min-icon

மராட்டியத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 20 ஆயிரத்தை தாண்டி உள்ளது. ஒரே நாளில் 48 பேர் உயிரிழந்தனர்.

மும்பை, 

மராட்டிய மாநிலத்தை ஆட்கொல்லி கொரோனா வைரஸ் புரட்டி போட்டு உள்ளது. இங்கு நாள் தோறும் நோய் தொற்று அசுர வேகத்தில் பரவி வருகிறது. குறிப்பாக கடந்த 4 நாட்கள் தொடா்ந்து முறையே 1,233, 1,362, 1,216, 1,089 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இதனால் மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்தது.

இந்தநிலையில் மாநிலத்தில் நேற்றும் 1,165 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டது தெரியவந்துள்ளது. இதனால் மராட்டியத்தில் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்து 228 ஆக உயர்ந்து உள்ளது.

இதேபோல நேற்று ஒரே நாளில் மாநிலத்தில் 48 பேர் பலியாகி உள்ளனர். பலியானவர்களில் 21 பேர் ஆண்கள். 27 பேர் பெண்கள். இதேபோல 27 பேர் மும்பையையும், 9 பேர் புனே நகரையும், 8 பேர் மாலேகாவையும் சேர்ந்தவர்கள். மற்றவர்கள் புனே மாவட்டம், அகோலா, நாந்தெட், அமராவதி பகுதிகளை சேர்ந்தவர்கள். இதனால் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 779 ஆகி உள்ளது.

இதற்கிடையே ஒரே நாளில் மாநிலத்தில் 330 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமாகி ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பினர். இதுவரை மொத்தம் 3 ஆயிரத்து 800 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமாகி உள்ளனர்.

முக்கிய நகரங்களில் விவரம்

மராட்டியத்தில் முக்கிய நகரங்களில் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அடைப்பு குறிக்குள் பலியானவர்கள் விவரம் வருமாறு:-

தானே மாநகராட்சி - 800 (8 பேர் பலி), நவிமும்பை மாநகராட்சி - 789 (4), கல்யாண்- டோம்பிவிலி மாநகராட்சி - 316 (3), உல்லாஸ்நகர் மாநகராட்சி - 20, பிவண்டி மாநகராட்சி - 21 (2), பால்கர் - 32 (2), வசாய் விரார் மாநகராட்சி - 216 (9), ராய்காட் - 89 (1), பன்வெல் மாநகராட்சி - 137 (2), நாசிக் மாநகராட்சி - 73, மாலேகாவ் மாநகராட்சி - 472 (20), அகமதுநகர் - 51 (2), ஜல்காவ் - 111 (12), புனே மாநகராட்சி - 1975 (141), புனே புறநகர் - 118 (5), பிம்பிரி சிஞ்ச்வாட் மாநகராட்சி - 132 (3), சோலாப்பூர் மாநகராட்சி -184 (10), அவுரங்காபாத் மாநகராட்சி - 437 (12), நாக்பூர் மாநகராட்சி - 222 (2).

Next Story