கொரோனா நோயாளியின் குடும்ப உறுப்பினர் சிகிச்சைக்கு வந்தால் சுகாதாரத்துறை இணையதளத்தில் விவரங்களை பதிவேற்ற வேண்டும்


கொரோனா நோயாளியின் குடும்ப உறுப்பினர் சிகிச்சைக்கு வந்தால் சுகாதாரத்துறை இணையதளத்தில் விவரங்களை பதிவேற்ற வேண்டும்
x
தினத்தந்தி 10 May 2020 9:42 AM IST (Updated: 10 May 2020 9:42 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபரின் குடும்ப உறுப்பினர்கள் சிகிச்சைக்கு வந்தால், அது குறித்த விவரங்களை சுகாதாரத்துறை இணையதளத்தில் பதிவேற்றம் செய்திட வேண்டும் என தனியார் டாக்டர்களுக்கு கலெக்டர் மெகராஜ் உத்தரவிட்டு உள்ளார்.

நாமக்கல்,

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவாமல் தடுக்க மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த மாவட்ட அளவிலான இந்திய மருத்்துவ சங்க மருத்துவர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் மெகராஜ் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

ஒவ்வொரு மருத்துவமனையிலும் நோயாளிகள் மற்றும் உடன் இருப்பவர்கள் மருத்துவமனைக்கு வந்த உடன் கைகழுவுவதற்கு ஏற்ப கிருமி நாசினியுடன் கூடிய கைகழுவும் இடம் அமைத்து கொடுக்க வேண்டும். தங்கள் மருத்துவமனையின் தரை பகுதி, கைப்பிடி பகுதிகள், படுக்கைகள் மற்றும் அனைத்து பயன்பாடு உள்ள பகுதிகளிலும் லைசால் கொண்டு அடிக்கடி சுத்தம் செய்திட வேண்டும்.

இணையதளத்தில் பதிவேற்றம்

நோயாளிகளுக்கு முக கவசம் அணிவது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மருத்துவமனையை விட்டு வெளியே செல்லும்போது ஒவ்வொருவரும் கிருமி நாசினி கொண்டு கைகழுவிய பின்னர் வெளியே செல்லுமாறு அறிவுறுத்திட வேண்டும். மேலும் நெஞ்சு சளி, காய்ச்சல்் கண்ட நபர்கள் மற்றும் கொரோனா நோய் தொற்றினால் பாதிக்கப்பட்ட நபர்களின் குடும்ப உறுப்பினர்கள் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்தால், அவர்களின் விவரங்களை நாள்தோறும் சுகாதாரதுறை இணைய தளத்தில் பதிவேற்றம் செய்திட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இக்கூட்டத்தில் மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக வருபவர்களின் விவரங்களை சுகாதாரதுறை இணைய தளத்தில் பதிவேற்றம் செய்வது குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் துர்காமூர்த்தி, இணை இயக்குனர் (மருத்துவப்பணிகள்) சித்ரா, துணை இயக்குனர் (சுகாதாரப்பணிகள்) சோமசுந்தரம் உள்பட இந்திய மருத்்துவ சங்க மருத்துவர்கள், அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story