ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்வு: பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் போலீஸ் சூப்பிரண்டு வேண்டுகோள்


ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்வு: பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் போலீஸ் சூப்பிரண்டு வேண்டுகோள்
x
தினத்தந்தி 11 May 2020 5:16 AM IST (Updated: 11 May 2020 5:16 AM IST)
t-max-icont-min-icon

ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதால் விதிமுறைகளை கடைபிடித்து பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு ராஜன் வேண்டுகோள் விடுத்தார்.

தர்மபுரி,

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக பல்வேறு தொழில்களுக்கு ஊரடங்கில் இருந்து கட்டுப்பாடுகள் தளர்த்திக் கொள்ளப்பட்டது. அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் திறந்திருக்கும் நேரம் அதிகரிக்கப்பட்டது. இதனால் தர்மபுரி மாவட்டத்தில் பொதுமக்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களின் போக்குவரத்தும் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதால் போலீசார் கடைபிடிக்க வேண்டிய பணிகள் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு போலீஸ் சூப்பிரண்டு ராஜன் தலைமை தாங்கினார். கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுஜாதா, துணை போலீஸ் சூப்பிரண்டுகள் ராஜ்குமார், மணிகண்டன், இன்ஸ்பெக்டர்கள் மற்றும் அலுவலர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு மாவட்டம் முழுவதும் போலீசார் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளித்தனர்.

பாராட்டத்தக்கது

அப்போது போலீஸ் சூப்பிரண்டு ராஜன் பேசுகையில், கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. போலீசார் மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது பாராட்டத்தக்கது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியே வரும் போது கட்டாயம் முககவசம் அணிய வேண்டும். இல்லையெனில் போலீசாரின் கண் காணிப்பு பணியின் போது எச்சரிக்கப்படுவார்கள்.

மேலும் கட்டுப்பாடுகளை மீறி இருசக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வெளியே வரும் போது அரசு அறிவித்துள்ள விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். போலீசாரின் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கூறினார்.

Next Story