மாவட்ட செய்திகள்

அம்பேத்கர் மக்கள் இயக்கம் சார்பில் ஏழை மக்களுக்கு நிவாரண உதவி + "||" + Relief aid for poor people on behalf of Ambedkar People's Movement

அம்பேத்கர் மக்கள் இயக்கம் சார்பில் ஏழை மக்களுக்கு நிவாரண உதவி

அம்பேத்கர் மக்கள் இயக்கம் சார்பில் ஏழை மக்களுக்கு நிவாரண உதவி
அம்பேத்கர் மக்கள் இயக்கம் சார்பில் ஏழை மக்களுக்கு நிவாரண உதவி.
சேலம்,

சேலம் குகை பகுதி 45-வது வார்டு அம்பேத்கர் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்கு ஏராளமான ஏழை குடும்பங்கள் வசித்து வருகின்றன. ஊரடங்கு உத்தரவால் வேலைவாய்ப்பு இல்லாமல் அவதிப்படும் அப்பகுதி பொதுமக்களுக்கு அம்பேத்கர் மக்கள் இயக்கம் சார்பில் நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி சங்கீத் தியேட்டர் அருகில் நடந்தது. நிகழ்ச்சிக்கு அம்பேத்கர் மக்கள் இயக்கத்தின் மாநில இளைஞரணி செயலாளர் ஜங்ஷன் அண்ணாதுரை தலைமை தாங்கி சுமார் 300 ஏழை மக்களுக்கு அரிசி, பருப்பு, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்.


சேலம் டவுன் போலீஸ் உதவி கமிஷனர் ஈஸ்வரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கொரோனா நோய் தொற்றை ஒழிப்பது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார். நிகழ்ச்சியில் தமிழ்நாடு பல்கலைக்கழக பேராசிரியர் மற்றும் பணியாளர் எஸ்.சி -எஸ்.டி நலச்சங்கத்தின் சேலம் மண்டல செயலாளர் பிச்சைமுத்து, அம்பேத்கர் மக்கள் இயக்க மாவட்ட இளைஞரணி செயலாளர் அம்பேத்கர், சேலம் மாநகர தலைவர் நேரு நகர் முருகன், மாவட்ட மாணவரணி செயலாளர் பாலாஜி, சூரமங்கலம் பகுதி பொறுப்பாளர்கள் ஜெயச்சந்திரன், சார்லஸ், ஓமலூர் ஒன்றிய தலைவர் ராம்ஜி, இளைஞரணி செயலாளர் நவீன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் கொரோனா நோய்த்தொற்றை ஒழிக்க இரவு, பகல் பாராமல் பணியாற்றி வரும் டாக்டர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள், காவல் துறை மற்றும் மின்சார துறையில் பணிபுரியும் ஊழியர்கள் ஆகியோருக்கு அவர்களது பணியைப் பாராட்டும் விதமாக கைகளை தட்டி நன்றி தெரிவிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் கொரோனா நிவாரண நிதி திட்டத்தை மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்
ரூ.2 ஆயிரம் கொரோனா நிவாரண நிதி வழங்கும் திட்டத்தை, சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (திங்கட் கிழமை) தொடங்கி வைக்கிறார். வீடு, வீடாக டோக்கன் வினியோகிக்கும் பணியும் தொடங்குகிறது.
2. மாற்றுத்திறனாளி பெண்ணின் திருமணத்துக்கு உதவிய போலீசார்
தாய், தந்தையை இழந்து தவித்த மாற்றுத்திறனாளி பெண்ணின் திருமணத்துக்கு போலீசார் பண உதவி செய்தனர்.
3. காங்கோ நாட்டில் நெருக்கடியில் உள்ள 96 லட்சம் மக்களுக்கு ஐ.நா. மனிதநேய அமைப்பு உதவி
காங்கோ நாட்டில் நெருக்கடியில் உள்ள 96 லட்சம் மக்களுக்கு ஐ.நா. மனிதநேய அமைப்பு உதவி வழங்க உள்ளது.
4. கொட்டாரம் பகுதியில் 4 இடங்களில் 1000 ஏழை குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள் தளவாய்சுந்தரம் வழங்கினார்
கொட்டாரம் பகுதியில் 4 இடங்களில் 1000 ஏழை குடும்பங்களுக்கு தளவாய்சுந்தரம் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
5. சோனியா காந்தி பிறந்த நாள் விழா காங்கிரசார் நலத்திட்ட உதவி
குமரி மாவட்டத்தில் சோனியாகாந்தி பிறந்தநாள் விழாவையொட்டி காங்கிரசார் நலத்திட்ட உதவி வழங்கி கொண்டாடினர்.