புதுவையில் மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு அரும்பார்த்தபுரம் பகுதி சீல் வைப்பு


புதுவையில் மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு அரும்பார்த்தபுரம் பகுதி சீல் வைப்பு
x
தினத்தந்தி 13 May 2020 8:08 AM IST (Updated: 13 May 2020 8:08 AM IST)
t-max-icont-min-icon

புதுவையில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளது. அவர் வசித்த அரும்பார்த்தபுரம் பகுதி முழுவதும் சீல் வைக்கப்பட்டுள்ளது.

மூலக்குளம்,

புதுச்சேரியில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட 9 பேர், மாகியில் 3 பேர், காரைக்காலில் ஒருவர் என மொத்தம் 13 பேர் சிகிச்சை பெற்றனர். இதில் மாகியில் முதியவர் ஒருவர் உயிரிழந்தார். அரியாங்குப்பம், திருவண்டார்கோவில், மாகி பகுதிகளில் மொத்தம் 9 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். காரைக்காலில் ஒருவரும், புதுவையில் 2 பேரும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் அரும்பார்த்தபுரம் திருக்குறளார் பகுதியைச் சேர்ந்த 36 வயது தனியார் நிறுவன ஊழியருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சீல் வைப்பு

இதனைத்தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார். அவர் வசிக்கும் பகுதி முழுவதும் சீல் வைக்கப்பட்டு, போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கொரோனா பாதித்த நபருடன் தொடர்பில் இருந்தவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட உள்ளது. புதுச்சேரியில் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.

Next Story