மாவட்ட செய்திகள்

ஓசூர் அருகே முககவசம் அணிந்து திருமணம் செய்த மணமக்கள் + "||" + The bride-to-be is wearing a mask beside Hosur

ஓசூர் அருகே முககவசம் அணிந்து திருமணம் செய்த மணமக்கள்

ஓசூர் அருகே முககவசம் அணிந்து திருமணம் செய்த மணமக்கள்
ஓசூர் அருகே முககவசம் அணிந்து திருமணம் செய்த மணமக்கள் 7 பேர் மட்டுமே பங்கேற்பு.
ஓசூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி பகுதியை சேர்ந்த நரேஷ்குமார். என்ஜினீயர். ஓசூர் அருகே கெலமங்கலம் பகுதியை சேர்ந்த சந்தியா. பி.பி.ஏ. பட்டதாரி. இவர்களுக்கு திருமணம் நடத்த கடந்த ஜனவரி மாதத்தில் நிச்சயிக்கப்பட்டது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மக்கள் அதிகளவில் கூடுவதை தவிர்க்க இவர்களது திருமணத்தை மிக எளிமையாக நடத்த இருவீட்டு பெற்றோரும் முடிவு செய்தனர். மணப்பெண்ணின் ஊரான கோட்டட்டி கிராமத்தில் இவர்களின் திருமணம் நேற்று நடைபெற்றது. விழாவையொட்டி மங்கள வாத்தியங்கள் தவிர்க்கப்பட்டது. மேலும் உறவினர்களுக்கு அழைப்பு விடுக்காமல் மணமக்கள், அவர்களது பெற்றோர் மற்றும் திருமணத்தை நடத்தி வைக்க ஒருவர் என மொத்தம் 7 பேர் மட்டுமே இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். மேலும் மணமக்கள் மற்றும் அவர்களது பெற்றோர் முக கவசம் அணிந்தவாறு இந்த திருமணத்தை வீட்டின் முன்பாகவே எளிமையாக நடத்தி முடித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. திருமணம் செய்வதாக பொய் வாக்குறுதி அளித்து உறவு வைத்துக்கொள்வது கற்பழிப்பு ஆகாது: ஒடிசா ஐகோர்ட்டு அதிரடி கருத்து
திருமணம் செய்து கொள்வதாக பொய் வாக்குறுதி அளித்து ‘செக்ஸ்’ உறவு வைத்துக்கொள்வது கற்பழிப்பு ஆகாது என்று ஒடிசா ஐகோர்ட்டு கூறியுள்ளது.
2. திருமணத்துக்கு மறுப்பு தெரிவித்ததால் விஷ மாத்திரை கொடுத்து அழகுநிலைய பெண் கொலை
திருமணத்துக்கு மறுப்பு தெரிவித்ததால் விஷ மாத்திரை கொடுத்து அழகுநிலைய பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.