கடலூர் மாவட்டத்தில் கொரோனா பாதித்த 10 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்
கடலூர் மாவட்டத்தில் கொரோனா பாதித்த 10 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 164 பேரின் உமிழ்நீர் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கடலூர்,
கடலூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. இருப்பினும் டெல்லி மாநாடு, வெளி மாநிலத்திற்கு சென்று திரும்பிய 26 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். பின்னர் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து கடலூர் திரும்பியவர்களால் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியது. நேற்று முன்தினம் வரை 413 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதில் பெண் ஒருவர் இறந்துள்ளார். நேற்று பரிசோதனை முடிவுகள் வந்த நிலையில், யாருக்கும் பாதிப்பு இல்லை.
10 பேர் வீடு திரும்பினர்
ஏற்கனவே கொரோனா பாதித்த 26 பேர் தங்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்நிலையில் கொரோனா பாதித்து சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 10 பேர் குணமடைந்தனர். அவர்கள் 10 பேரும் நேற்று அவரவர் வீடுகளுக்கு பாதுகாப்புடன் திரும்பினர். கொரோனா அறிகுறியுடன் கடலூர் அரசு மருத்துவமனையில் 85 பேர், சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 69 பேர், விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் 49 பேர், சிதம்பரம் அரசு மருத்துவமனையில் 30 பேர், திட்டக்குடி அரசு மருத்துவமனையில் 16 பேர், ஸ்ரீகிருஷ்ணா கேன்சர் மருத்துவமனை 64 பேர், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் 3 பேர், விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, சென்னையில் தலா ஒருவர் என மொத்தம் 377 பேர் தனி வார்டுகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கண்காணிப்பு
கொரோனா அறிகுறியின்றி பாதிக்கப்பட்டவர்கள் பாதுகாப்பு மையமான ஆலடி ரோடு விடுதியில் 30 பேர், அண்ணாமலை பல்கலைக்கழக விடுதி 19 பேர், வீடுகளில் 8 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா பாதித்தவர்களின் தொடர்பில் இருந்த 3 ஆயிரத்து 230 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். மாவட்டத்தில் இதுவரை 8 ஆயிரத்து 695 பேருக்கு பரிசோதனை முடிவுகள் வந்தநிலையில், 413 பேருக்கு பாதிப்பு உள்ளது. 8 ஆயிரத்து 16 பேருக்கு பாதிப்பு இல்லை. 266 பேருக்கு பரிசோதனை முடிவுகள் வர வேண்டும்.
உமிழ்நீர்
நேற்று 164 பேரின் உமிழ்நீர் மற்றும் ரத்தம் மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. மொத்தம் 430 பேரின் பரிசோதனை முடிவுகள் வர வேண்டியதுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Related Tags :
Next Story