புதுச்சேரியில் 5,484 பேருக்கு கொரோனா பரிசோதனை சுகாதாரத்துறை இயக்குனர் தகவல்


புதுச்சேரியில் 5,484 பேருக்கு கொரோனா பரிசோதனை சுகாதாரத்துறை இயக்குனர் தகவல்
x
தினத்தந்தி 18 May 2020 2:18 AM GMT (Updated: 18 May 2020 2:18 AM GMT)

புதுச்சேரியில் 5,484 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை இயக்குனர் மோகன் குமார் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி,

புதுச்சேரி கதிர்காமம் அரசு மருத்துவமனையில் 6 பேர், காரைக்கால் பொது மருத்துவமனையில் 2 பேர், ஜிப்மர் மருத்துவமனையில் தமிழகத்தை சேர்ந்த 5 பேர் என மொத்தம் 13 பேர் கொரோனாவிற்காக சிகிச்சை பெற்று வருகின்றனர். புலம்பெயர்ந்த வடமாநில தொழிலாளர்கள் நேற்று (நேற்று முன்தினம்) புதுவை மற்றும் காரைக்காலில் இருந்து சிறப்பு ரெயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

புதுச்சேரியில் இதுவரை 5,484 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் 5,320 பேருக்கு கொரோனா தொற்று இல்லை என வந்துள்ளது. மீதமுள்ள முடிவுகளுக்காக காத்திருக் கிறோம். ஞாயிற்றுக்கிழமைகளில் இறைச்சி மற்றும் மீன் கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகின்றது. அங்கு சமூக இடைவெளியை கடைபிடிப்பது இல்லை. சிலர் முக கவசம் அணிவது இல்லை. இது ஏற்புடையது அல்ல.

சமூக இடைவெளி கட்டாயம்

தற்போதைய நிலையில் கொரோனா யாரிடம் இருந்து வருகிறது, எவ்வாறு வருகிறது என்பதை கண்டுபிடிக்க முடியாது. எனவே இறைச்சி கடைகளில் ஒன்றாக கூட்டம் கூடக்கூடாது. பொதுமக்கள் சமூக இடைவெளியை கட்டாயம் கடைபிடிக்கவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story