மாவட்ட செய்திகள்

திருப்பூர் மார்க்கெட்டில் மீன் விற்பனை அமோகம் 30 டன் விற்று தீர்ந்தது + "||" + Fish sales at Tirupur market sold 30 tonnes

திருப்பூர் மார்க்கெட்டில் மீன் விற்பனை அமோகம் 30 டன் விற்று தீர்ந்தது

திருப்பூர் மார்க்கெட்டில் மீன் விற்பனை அமோகம் 30 டன் விற்று தீர்ந்தது
திருப்பூர் தென்னம்பாளையத்தில் உள்ள மீன் மார்க்கெட்டுக்கு நேற்று முன்தினம் இரவு ஆந்திராவில் இருந்து 30 டன் வளர்ப்பு மீன்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது.
திருப்பூர்,

திருப்பூர் தென்னம்பாளையத்தில் உள்ள மீன் மார்க்கெட்டுக்கு நேற்று முன்தினம் இரவு ஆந்திராவில் இருந்து 30 டன் வளர்ப்பு மீன்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கலெக்டரின் உத்தரவுப்படி இரவு விற்பனை மட்டுமே நடைபெற்றது. அதுவும் மொத்த விற்பனையாளர்களுக்கு மட்டுமே மீன் விற்பனை செய்யப்பட்டது.. சில்லறை விற்பனை இல்லாததால் பொதுமக்கள் யாரும் மீன் வாங்க அனுமதிக்கப்படவில்லை.


இதுகுறித்து மீன் மொத்த வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:-

நேற்று முன்தினம் இரவு 9 மணிமுதல் நேற்று காலை 5 மணிவரை மட்டுமே மொத்த விற்பனை நடைபெற்றது. 30 டன் மீன்களும் விற்று தீர்ந்து விட்டன. கடந்த ஒரு வாரமாக ஒரு கிலோ கட்லா ரூ.180-க்கும், ரோகு ரூ.160-க்கும், மிருகால் ரூ.160-க்கும், அணைபாறை ரூ.180-க்கும்,நெய் மீன் ரூ.100-க்கும் விற்பனையானது. விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் விற்பனை விறுவிறுப்பாக இருந்தது என்றனர்.இதேபோல் திருப்பூர் சி.டி.சி.டெப்போ அருகில் உள்ள மீன் கடைகளிலும் மீன் விற்பனை அமோகமாக நடைபெற்றது.

அதேபோல இறைச்சிகடைகளில் ஆட்டு இறைச்சிக்கு அதிக கிராக்கி உள்ளதால் பெரும்பாலான கடைகளில் ஆட்டு இறைச்சி விற்பனை செய்யப்படவில்லை. ஒரு சில கடைகளில் மட்டுமே ஆட்டு இறைச்சி விற்பனை செய்யப்பட்டது. கடந்த வாரம் ரூ.700-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் நேற்று ஒரு கிலோ ஆட்டிறைச்சி ரூ.800-க்கு விற்பனை செய்யப்பட்டது. கோழி இறைச்சி கிடைப்பதிலும் சிரமம் இருப்பதால் ஒரு கிலோ கோழி இறைச்சி ரூ.300 வரை விற்பனை செய்யப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. ஜெயங்கொண்டம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாயிகள் அதிகாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
ஜெயங்கொண்டம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாயிகள் அதிகாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் விவசாயிகள் ஒரே நேரத்தில் குவிந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
2. கொரோனா சிகிச்சைக்கான ஒரு மாத்திரை விலை ரூ.103; இன்று மாலை முதல் இந்தியாவில் விற்பனை
கொரோனா பாதித்த நோயாளிகளுக்கான வைரஸ் எதிர்ப்பு மாத்திரை இன்று மாலை முதல் இந்தியாவில் விற்பனை செய்யப்பட உள்ளது.
3. மீன், காய்கறி மார்க்கெட்டுகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது சமூக இடைவெளி காணாமல் போனது
கோவை மீன், காய்கறி மார்க்கெட்டுகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. அங்கு அதிகளவில் பொதுமக்கள் குவிந்ததால் சமூக இடைவெளியும் காணாமல்போனது.
4. நாமக்கல் மாவட்டத்தில் மது, கள், சாராயம் விற்பனை செய்த 333 பேர் கைது
நாமக்கல் மாவட்டத்தில் ஊரடங்கு தொடங்கிய நாள் முதல் இதுவரை சட்டவிரோதமாக மதுபானம், கள், சாராயம் விற்பனை செய்த 333 பேர் கைது செய்யப்பட்டு இருப்பதாக போலீஸ் சூப்பிரண்டு அருளரசு தெரிவித்து உள்ளார்.
5. விருத்தாசலத்தில் டோக்கன் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே மது விற்பனை
டோக்கன் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே மது விற்பனை டாஸ்மாக் ஊழியர்களுக்கு போலீஸ் அறிவுறுத்தல்.