மாவட்ட செய்திகள்

வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே ஆட்டோ இயங்க அனுமதி வழங்கக்கோரி திரண்ட டிரைவர்கள் + "||" + Drivers seeking permission to run auto near Vellore Collector's office

வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே ஆட்டோ இயங்க அனுமதி வழங்கக்கோரி திரண்ட டிரைவர்கள்

வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே ஆட்டோ இயங்க அனுமதி வழங்கக்கோரி திரண்ட டிரைவர்கள்
வேலூர் மாவட்டத்தில் ஆட்டோ இயங்க அனுமதி வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகம் அருகே 100-க்கும் மேற்பட்ட டிரைவர்கள் திரண்டனர். தனிநபர் இடைவெளியை பின்பற்றாததால் 22 பேர் கைது செய்யப்பட்டனர்.
வேலூர்,

இந்தியாவில் கொரோனா தொற்று பரவுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இதையொட்டி நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ரெயில், பஸ், கார், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் பொது போக்குவரத்துக்கு இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனால் கார், ஆட்டோ டிரைவர்கள் பொருளாதார ரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பல்வேறு சங்கத்தில் உள்ள கார், ஆட்டோ டிரைவர்கள் நிவாரண உதவி வழங்கக்கோரியும், ஆட்டோ, கார் இயங்க அனுமதிக்கக்கோரியும் வலியுறுத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று வேலூர் மாவட்ட ஆட்டோ தொழிலாளர் சங்கம் (சி.ஐ.டி.யு.) சார்பில் 100-க்கும் மேற்பட்ட ஆட்டோ டிரைவர்கள் வேலூர் மாவட்டத்தில் ஆட்டோ இயங்க அனுமதி வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகம் அருகே திரண்டனர். பின்னர் அவர்கள் ஊர்வலமாக கலெக்டர் அலுவலகம் நோக்கி சென்றனர். அவர்களை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். அவர்கள் சங்க நிர்வாகிகள் 5 பேரை மட்டும் கலெக்டர் அலுவலகம் செல்ல அனுமதித்தனர்.

அதை தொடர்ந்து வேலூர் கலெக்டர் அலுவலக பொது மேலாளரிடம் சங்க நிர்வாகிகள் கோரிக்கை மனு அளித்தனர். அதில் கூறியிருந்ததாவது:-

வேலூர் மாவட்டத்தில் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் ஓடுகின்றன. வேலூர் மாநகரில் மட்டும் சுமார் 7 ஆயிரம் ஆட்டோக்கள் உள்ளன. ஊரடங்கு காரணமாக சுமார் 60 நாட்கள் ஆட்டோக்கள் இயங்காததால் வாழ்வாதாரம் இன்றி தவித்து வருகிறோம்.

தற்போது 4-வது கட்ட ஊரடங்கில் கடைகள் திறப்பது உள்பட பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. எனவே வேலூர் மாவட்டம் முழுவதும் ஆட்டோக்கள் இயங்க அனுமதி வழங்க வேண்டும். டிரைவர்கள் தங்களின் குடும்பம் மற்றும் வாழ்வாதாரத்துக்காக சமூக இடைவெளியுடன் பாதுகாப்பான முறையில் ஆட்டோ ஓட்ட அனுமதிக்க வேண்டும்.

மேலும் மருத்துவமனைகளுக்கு அவசரமாக நோயாளிகளை ஏற்றி சென்ற பல ஆட்டோக்கள் விதியை மீறி இயங்கியதாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவற்றையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது. மனுவை பெற்றுக்கொண்ட பொதுமேலாளர் முரளி, கலெக்டரிடம் இதுகுறித்து தெரிவிப்பதாக கூறினார்.

இதனிடையே கலெக்டர் அலுவலகம் அருகே 100-க்கும் மேற்பட்ட ஆட்டோ டிரைவர்கள் தனிநபர் இடைவெளியை பின்பற்றாமல் திரண்டிருந்தனர். அரசின் விதிமுறைகளை பின்பற்றாததால் அவர்களை போலீசார் கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது பலர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். 22 பேரை போலீசார் கைது செய்து அப்பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இதனால் கலெக்டர் அலுவலகம் அருகே சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. வேலூர், அணைக்கட்டில் 3 போலி டாக்டர்கள் கைது ஆற்காட்டில் மருத்துவமனைக்கு ‘சீல்’
வேலூர், அணைக்கட்டில் 3 போலி டாக்டர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆற்காட்டில் மருத்துவமனைக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.
2. வேலூர் மாவட்ட நகராட்சி, பேரூராட்சிப் பகுதிகளில் கடைகளை திறக்க புதிய கட்டுப்பாடுகள் - மாவட்ட ஆட்சியர் உத்தரவு
வேலூர் மாவட்டத்தின் நகராட்சி மற்றும் பேரூராட்சிப் பகுதிகளில் கடைகளை திறப்பது தொடர்பாக புதிய கட்டுப்பாடுகளை விதித்து மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் உத்தரவிட்டுள்ளார்.
3. வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் ஒரே நாளில் 254 பேருக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7,574 ஆக உயர்வு
வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் ஒரே நாளில் 254 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
4. வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் ஒரே நாளில் 249 பேருக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5,473 ஆக உயர்வு
வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் ஒரே நாளில் 249 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
5. வேலூரில் 2 மணிநேரம் கொட்டித்தீர்த்த மழை: கஸ்பாவில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது
வேலூரில் 2 மணிநேரம் கொட்டித்தீர்த்த மழையால், கஸ்பாவில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.