திருவள்ளூரில் இருந்து சொந்த ஊர்களுக்கு வெளிமாநில தொழிலாளர்களை ரெயில் மூலம் அனுப்பி வைத்த கலெக்டர்
திருவள்ளூரில் இருந்து வெளிமாநில தொழிலாளர்களை கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தார்.
திருவள்ளூர்,
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவின்பேரில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார், மாவட்டம் முழுவதும் தங்கி உள்ள வடமாநில தொழிலாளர்களை அவர்களின் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை மேற்கொண்டார். அதன்படி நேற்று திருவள்ளூர் மாவட்டத்தில் தங்கி இருந்த உத்தரபிரதேசத்தை சேர்ந்த 550 தொழிலாளர்கள் மற்றும் தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களில் இருந்து வந்த உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 782 தொழிலாளர்கள் என மொத்தம் 1,332 பேர் திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் இருந்து சிறப்பு ரெயிலில் அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
முன்னதாக ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என அவர்கள் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அத்துடன் அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் வழி அனுப்பி வைத்தார். இதுவரை திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து 18 ஆயிரம் வெளிமாநில தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு வழியனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர். அப்போது மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) பன்னீர்செல்வம், உதவி இயக்குனர்(நில அளவை)ராமசந்திரன், திருவள்ளூர் ஆர்.டி.ஓ.வித்யா, தாசில்தார் சீனிவாசன் (அலுவலக மேலாளர் பொது), வருவாய்துறை அலுவலர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் ரெயில்வேதுறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story