ஆலந்தூரில் வங்கியில் கடன் வாங்கி தருவதாக ரூ.6 லட்சம் மோசடி - 4 பேர் கைது


ஆலந்தூரில் வங்கியில் கடன் வாங்கி தருவதாக ரூ.6 லட்சம் மோசடி - 4 பேர் கைது
x
தினத்தந்தி 26 May 2020 4:45 AM IST (Updated: 26 May 2020 1:53 AM IST)
t-max-icont-min-icon

ஆலந்தூரில் வங்கியில் கடன் வாங்கி தருவதாக ரூ.6 லட்சம் மோசடி செய்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஆலந்தூர்,

சென்னையை அடுத்த ஆலந்தூர் எம்.கே.என். சாலையில் ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருபவர் வெங்கடேசன். இவருக்கு தனியார் வங்கி மூலம் ரூ.20 லட்சம் கடன் வாங்கி தருவதாக நாவலூரைச் சேர்ந்த தாமோதரன் (வயது 45) என்பவர் கூறினார். இதை நம்பிய வெங்கடேசன், வங்கியில் கடன் பெறுவதற்தாக ரூ.6 லட்சத்துக்கான காசோலையை தாமோதரனிடம் கொடுத்தார். ஆனால் அவர், சொன்னபடி வங்கியில் கடன் வாங்கி தராமல், வெங்கடேசன் கொடுத்த ரூ.6 லட்சத்துக்கான காசோலையை தனது நண்பர்கள் மூலம் மாற்றி பணமாக்கி மோசடி செய்திருப்பது தெரிய வந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த வெங்கடேசன், இந்த மோசடி குறித்து பரங்கிமலை போலீஸ் துணை கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்தார். இதையடுத்து போலீஸ் துணை கமிஷனர் பிரபாகரன் உத்தரவின்பேரில் பரங்கிமலை குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஹரிஹரன் வழக்குப்பதிவு செய்து விசாரித்தார். இதையடுத்து வங்கியில் கடன் வாங்கி தருவதாக கூறி மோசடி செய்த தாமோதரனை போலீசார் கைது செய்தனர். 

மேலும் அவருக்கு உடந்தையாக இருந்த மாங்காட்டை சேர்ந்த பாலமுருகன்(40), கோவலத்தை சேர்ந்த ஆத்மநாதன்(35), அம்பத்தூரை சேர்ந்த வாசுதேவன்(39) ஆகிய மேலும் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மோசடி செய்ததில் ரூ.5 லட்சத்து 50 ஆயிரம் பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். கைதான 4 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Next Story