கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மேலும் 10 பேருக்கு கொரோனா
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மேலும் 10 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 146 ஆக உயர்ந்துள்ளது.
கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் வரை 136 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் நேற்று 1,107 பேரின் பரிசோதனை முடிவுகள் வெளியானது.
இதில் மராட்டியத்தில் இருந்து வந்த 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 146 ஆக உயர்ந்துள்ளது.
இதற்கிடையே மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 18 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் மாவட்டத்தில் குணமடைந்தோர் எண்ணிக்கை 61-ல் இருந்து 79 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் 4 பேர் விழுப்புரம், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைகளிலும், 63 பேர் தச்சூர், குமாரமங்கலத்தில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்திலும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் மராட்டியத்தில் இருந்து சிறப்பு ரெயில் மூலம் விழுப்புரம் வந்த கள்ளக்குறிச்சியை 591 பேர், உளுந்தூர்பேட்டை பாலி கிராமத்தில் உள்ள நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருக்கோவிலூர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, உளுந்தூர்பேட்டை பாதூர் கிராமத்தில் உள்ள அண்ணாமலை பாலிடெக்னிக் கல்லூரி ஆகிய இடங்களில் தங்கவைக்கப்பட்டு மருத்துவக்குழுவினரால் கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு வருகிறார்கள் என மாவட்ட கலெக்டர் கிரண்குராலா தெரிவித்துள்ளார்.

Related Tags :
Next Story