செங்கல்பட்டில் ரவுடி வெட்டிக்கொலை
செங்கல்பட்டில் ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
செங்கல்பட்டு,
செங்கல்பட்டு நகர பகுதியை ஒட்டியுள்ள பச்சையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கருணாகரன் (வயது 40). கரிமேடு பகுதியை சேர்ந்தவர் உசேன் (23). கே.கே. தெருவை சேர்ந்தவர் சுரேஷ் (24), அஜய் (24), வினோத் என்ற பீட்டர் (24). ரவுடிகளான இவர்கள் வழிப்பறி, கொள்ளை சம்பவங்களில் தொடர்பு உடையவர்கள். இவர்கள் மீது போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளன. செங்கல்பட்டு நகர பகுதியில் டாஸ்மாக் கடைகள் திறந்த நிலையில் கருணாகரனிடம் ரூ.2 ஆயிரத்து 500 கொடுத்து மது வாங்கி வரும்படி கூறியுள்ளனர்.
நேற்று முன்தினம் காலையில் மது வாங்க சென்ற கருணாகரன் மாலை வரை வீடு திரும்பாததால் மற்ற 4 பேரும் கருணாகரனை தேடினர். பச்சையம்மன் கோவில் அருகே போதையில் கிடந்தார். மது கிடைக்காத ஆத்திரத்தில் இவர்கள் 4 பேரும் கருணாகரணை கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த செங்கல்பட்டு டவுன் போலிசார் அவரது உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து செங்கல்பட்டு டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்டாலின் வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தார்.
Related Tags :
Next Story