தி.மு.க.வினர் அனைத்து சமுதாய மக்களையும் கேவலமாக பேசுகிறார்கள்’ ; எச்.ராஜா குற்றச்சாட்டு
‘தி.மு.க.வினர் அனைத்து சமுதாய மக்களையும் கேவலமாக பேசுகிறார்கள்‘ என்று சேலத்தில் பா.ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறினார்.
சேலம்,
தி.மு.க.வில் எந்த ஒரு தலைவரும் சரியான மனநிலையோடு இல்லை. ஆர்.எஸ். பாரதி, மதுரை எம்.எல்.ஏ. தியாகராஜன், ஜெ.அன்பழகன் உள்ளிட்டவர்கள் பட்டியல் இன மக்கள், சலவை தொழிலாளர்கள் என அனைத்து சமுதாய மக்களையும் கேவலமாக பேசி வருகின்றனர். இதையெல்லாம் மக்கள் புரிந்து வைத்திருக்கிறார்கள். அவர்களுக்கு சரியான நேரத்தில் பதிலடி கொடுப்பார்கள். இவ்வாறு எச்.ராஜா கூறினார்.
பேட்டியின் போது மாநகர் மாவட்ட தலைவர் சுரேஷ்பாபு, மாவட்ட செயலாளர் ரமேஷ், முன்னாள் மாவட்ட தலைவர் கோபிநாத் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.
சேலம் செவ்வாய்பேட்டையில் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள பா.ஜனதா கட்சியின் முன்னாள் மாநில தலைவர் கே.என்.லட்சுமணனை சந்தித்து நலம் விசாரிப்பதற்காக நேற்று காலை அக்கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா சேலத்துக்கு வந்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
இந்தியாவில் கொரோனா வைரசால் சுமார் 1 லட்சத்து 50 ஆயிரம் பேர் மட்டும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜூலை மாதத்திற்குள் இந்தியாவில் 30 முதல் 50 கோடி பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்படுவார்கள் என கணக்கீடு செய்து தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்தியாவில் கொரோனா 1 லட்சத்து 50 ஆயிரம் பேருடன் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. சில ஆயிரம் உயிர்கள் பலியாகி இருந்தாலும் ஒவ்வொரு உயிரும் விலைமதிக்க முடியாதது. சீரிய தலைமை மற்றும் சரியான நடவடிக்கையால் இந்திய பொருளாதாரம் வீழ்ச்சி கட்டுப்படுத்தப் பட்டுள்ளது.
பஊரடங்கு உத்தரவு காரணமாக தற்காலிகமாக வேலையிழப்பு ஏற்படும் என்றும், அதுவும் 13 கோடி பேருக்கு வேலை பறிபோகும் என்றும் கூறப்பட்டது. ஆனால் பிரதமர் மோடி எடுத்த நடவடிக்கையில் நாடு இந்த கொரோனா தாக்கம் முடிந்தவுடன் மீண்டும் வளர்ச்சி பாதையில் செல்ல திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. சிலரின் தூண்டுதலால் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் அவர்களது சொந்த ஊர்களுக்கு செல்கிறார்கள்.
சிலர் நடந்தே தங்களது சொந்த ஊருக்கு செல்லும் நிலையை காணமுடிகிறது. இது தவிர்க்கப்பட வேண்டும். அதாவது இத்தாலியை சேர்ந்த சிலர் 1000 பஸ்களை இயக்குவதாக கூறியுள்ளனர். எப்படியாவது இந்த நாட்டில் லட்சக்கணக்கில் பிணங்கள் விழும் என எதிர்பார்த்தார்கள். ஆனால் அது நடக்கவில்லை. அரசு கூறும் அறிவுரைப்படி கேட்டு நடந்தால் கொரோனாவை கட்டுப்படுத்தி தீர்வு காணமுடியும்.
தி.மு.க.வில் எந்த ஒரு தலைவரும் சரியான மனநிலையோடு இல்லை. ஆர்.எஸ். பாரதி, மதுரை எம்.எல்.ஏ. தியாகராஜன், ஜெ.அன்பழகன் உள்ளிட்டவர்கள் பட்டியல் இன மக்கள், சலவை தொழிலாளர்கள் என அனைத்து சமுதாய மக்களையும் கேவலமாக பேசி வருகின்றனர். இதையெல்லாம் மக்கள் புரிந்து வைத்திருக்கிறார்கள். அவர்களுக்கு சரியான நேரத்தில் பதிலடி கொடுப்பார்கள். இவ்வாறு எச்.ராஜா கூறினார்.
பேட்டியின் போது மாநகர் மாவட்ட தலைவர் சுரேஷ்பாபு, மாவட்ட செயலாளர் ரமேஷ், முன்னாள் மாவட்ட தலைவர் கோபிநாத் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story