காசான்கோட்டையில் தூய்மை பணியாளர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி


காசான்கோட்டையில் தூய்மை பணியாளர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி
x
தினத்தந்தி 30 May 2020 12:00 PM IST (Updated: 30 May 2020 12:00 PM IST)
t-max-icont-min-icon

காடுவெட்டி குருவின் 2-ம் ஆண்டு நினைவுநாளையொட்டி அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

விக்கிரமங்கலம், 

அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே காசான்கோட்டையில், மறைந்த பா.ம.க. பிரமுகர் காடுவெட்டி குருவின் 2-ம் ஆண்டு நினைவுநாளையொட்டி அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. 

பின்பு காசான்கோட்டை ஊராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு அத்தியாவசிய பொருட்களான அரிசி மற்றும் மளிகை பொருட்கள், காய்கறிகள், துணிமணிகள் வழங்கப்பட்டன. மேலும், மதியம் பொதுமக்கள் சுமார் 2 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை பா.ம.க. மாநில செயற்குழு உறுப்பினரும், மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவருமான அசோசன் செய்திருந்தார். 

இதில், ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி அசோகன், துணைத்தலைவர் தயாளன், ஊராட்சி செயலாளர் சாமிநாதன் மற்றும் உறுப்பினர்கள், கட்சி பிர முகர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story