உதவி கமிஷனர் உள்பட 7 பேருக்கு புதிதாக கொரோனா குணமடைந்த 61 போலீசார் பணிக்கு திரும்பினர் கமிஷனர் வரவேற்பு


உதவி கமிஷனர் உள்பட 7 பேருக்கு புதிதாக கொரோனா குணமடைந்த 61 போலீசார் பணிக்கு திரும்பினர் கமிஷனர் வரவேற்பு
x
தினத்தந்தி 31 May 2020 5:43 AM IST (Updated: 31 May 2020 5:43 AM IST)
t-max-icont-min-icon

உயிர்க்கொல்லி நோயான கொரோனாவின் கொடூர தாக்குதலால் சென்னை காவல்துறையும் பாதிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

சென்னை போலீசில் கூடுதல் கமிஷனர் மற்றும் 2 துணை கமிஷனர்கள், 6 உதவி கமிஷனர்கள், 10-க்கும் மேற்பட்ட இன்ஸ்பெக்டர்கள் உள்பட 306 பேர் ஏற்கனவே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். நேற்று புதிதாக ஒரு உதவி போலீஸ் கமிஷனர் உள்பட 7 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 313 ஆக உயர்ந்தது.

ஒருபக்கம் கொரோனா தாக்குதல் தொடர்ந்தாலும், இன்னொரு பக்கம் பாதிக்கப்பட்டவர்களை குணமாகி மீண்டும் பணிக்கு வந்த வண்ணம் இருக்கிறார்கள். சென்னை ஆயுதப்படை சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் உள்பட 61 போலீசார் கொரோனா தாக்குதலில் இருந்து குணமாகி நேற்று மீண்டும் பணியில் சேர்ந்தனர். அவர்களுக்கு எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில் வரவேற்பு கொடுக்கப்பட்டது. போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் அவர்களுக்கு பூச்செண்டு கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். சென்னை சூளைமேடு போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 3 போலீசார் கொரோனா தொற்றில் இருந்து குணமாகி நேற்று பணியில் சேர்ந்தனர். அவர்களுக்கு துணை கமிஷனர் தர்மராஜன், உதவி கமிஷனர் முத்துவேல்பாண்டி ஆகியோர் பூச்செண்டு கொடுத்து வரவேற்றனர்.

1 More update

Next Story