கியாஸ் சிலிண்டரால் தாக்கி மனைவி கொலை; தூக்குப் போட்டு மீனவர் தற்கொலை
புதுவை முத்தியால்பேட்டையில் கியாஸ் சிலிண்டரால் தாக்கி மனைவியை கொலை செய்த மீனவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புதுச்சேரி,
புதுவை முத்தியால்பேட்டை சுனாமி குடியிருப்பை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 41). மீனவர். இவரது மனைவி மேனகா (35). இவர்களுக்கு 10 வயதில் மகளும், 8 வயதில் மகனும் உள்ளனர். கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்துள்ளது. சுப்பிரமணி மனநிலை பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் நேற்று மதியம் மீண்டும் கணவன்- மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சுப்பிரமணி வீட்டில் இருந்த கியாஸ் இல்லாத காலி சிலிண்டரை தூக்கி மேனகாவின் தலையில் போட்டார். இதில் மேனகா பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். மனைவி இறந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த சுப்பிரமணி உடனடியாக வீட்டிற்குள்ளேயே நைலான் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவத்தின் போது இவர்களது மகளும், மகனும் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தனர். சிறிதுநேரத்தில் அவர்கள் வீட்டுக்குள் வந்த போது தங்களது பெற்றோர் பிணமாக கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே அவர்கள் வெளியே வந்து இதுபற்றி கதறி அழுதபடி அக்கம் பக்கத்தினரிடம் தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து முத்தியால்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர், சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் ஆகியோர் அங்கு விரைந்து வந்தனர். வீட்டுக்குள் பிணமாக கிடந்த சுப்பிரமணி, மேனகா ஆகியோரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஒரேநேரத்தில் தாயையும்-தந்தையையும் இழந்த குழந்தைகள் அவர்களது உடல்களைப் பார்த்து கதறி அழுதது அனைவரையும் பரிதாபத்தில் ஆழ்த்தியது.

Related Tags :
Next Story