மேட்டூர் அணையில் கலெக்டர் ராமன் ஆய்வு
மேட்டூர் அணையில் இருந்து வருகிற 12-ந் தேதி காவிரி டெல்டா பாசனத்துக்காக தண்ணீர் திறந்து விடப்பட உள்ளது.
மேட்டூர்,
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்த நிலையில் நேற்று சேலம் மாவட்ட கலெக்டர் ராமன் மேட்டூர் அணையை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அணையின் வலதுகரை, இடதுகரை, கவர்னர் பாயிண்ட், 16 கண் மதகு ஆகிய இடங்களை நேரில் சென்று பார்வையிட்டார்.
மேலும் அணைக்கு வரும் நீரின் அளவு, வெளியேற்றப் படும் தண்ணீரின் அளவு உள்பட பல்வேறு விவரங்களை கேட்டறிந்தார். ஆய்வின் போது, பொதுப்பணித்துறை நிர்வாக பொறியாளர் தேவராஜ், உதவி பொறியாளர் மதுசூதனன் உள்பட அதிகாரிகள் உடன் இருந்தனர்.
இதே போன்று தேவூர் பகுதியில் ரூ.20 கோடி மதிப்பில் கிழக்குக்கரை கால்வாய், உபவாய்க்கால் புனரமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணியை கலெக்டர் ராமன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Related Tags :
Next Story