விமானங்களில் கோவை வந்த 432 பேருக்கு பரிசோதனை


விமானங்களில் கோவை வந்த 432 பேருக்கு பரிசோதனை
x
தினத்தந்தி 5 Jun 2020 3:20 AM IST (Updated: 5 Jun 2020 3:20 AM IST)
t-max-icont-min-icon

விமானங்கள் மூலம் கோவை வந்த 432 பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

கோவை,

சென்னை, பெங்களூரு, டெல்லி, ஐதராபாத் ஆகிய நகரங்களில் இருந்து விமானங்கள் மூலம் நேற்று 432 பயணிகள் கோவை வந்தனர். பின்னர் அவர்களுக்கு கோவை விமான நிலையத்தில் வைத்து கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் கோவையை சேர்ந்த 190 பேர் மட்டும் கண்காணிப்பு மையங்களில் தங்கவைக்கப்பட்டனர். மற்றவர்கள் வாகனங்கள் மூலம் அவரவர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Next Story