குடிபோதையில் தகராறு செய்த கணவரை கல்லால் அடித்து கொன்ற மனைவி


குடிபோதையில் தகராறு செய்த கணவரை கல்லால் அடித்து கொன்ற மனைவி
x
தினத்தந்தி 8 Jun 2020 8:33 AM IST (Updated: 8 Jun 2020 8:33 AM IST)
t-max-icont-min-icon

அந்தியூர் அருகே குடிபோதையில் தகராறு செய்த கணவரை மனைவி கல்லால் அடித்து கொலை செய்ததால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

அந்தியூர்,

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள நகலூரை சேர்ந்தவர் பிரான்சிஸ் (வயது 44). செங்கல் சூளையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். அவருடைய மனைவி மதனமேரி (40). இவர்களுக்கு 3 பெண் குழந்தைகளும், 1 மகனும் உள்ளனர்.

பிரான்சிஸ்சுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. பிரான்சிஸ் குடிக்க பணம் கேட்டு அடிக்கடி மதனமேரியிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்தநிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு குடிபோதையில் வீட்டுக்கு பிரான்சிஸ் வந்து உள்ளார். அப்போது கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த பிரான்சிஸ் அருகில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார். இந்த நிலையில் நேற்று மாலை குடிபோதையில் மீண்டும் வீட்டுக்கு வந்து மதனமேரியிடம் தகராறில் ஈடுபட்டார். இதில் மதனமேரி ஆத்திரம் அடைந்து அருகில் இருந்த கல்லை எடுத்து பிரான்சிஸ்சை தாக்கினார்.

இதில் தலையில் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். உடனே மதனமேரி அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். இதுபற்றி அறிந்ததும் அந்தியூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிரான்சிஸ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மதனமேரியை வலைவீசியை தேடி வருகிறார்கள்.


Next Story