கொரோனா வைரசால் டாக்டர் பலி


கொரோனா வைரசால் டாக்டர் பலி
x
தினத்தந்தி 11 Jun 2020 5:45 AM IST (Updated: 11 Jun 2020 5:45 AM IST)
t-max-icont-min-icon

சென்னை பட்டினப்பாக்கத்தை சேர்ந்த 33 வயது டாக்டர் ஒருவர், போரூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் இருதய அறுவை சிகிச்சை நிபுணராக பணியாற்றி வந்தார்.

பூந்தமல்லி,

டாக்டருக்கு கடந்த மாதம் 30ந் தேதி கொரோனா பாதிப்பு உறுதியானது. இதற்காக போரூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி டாக்டர் பரிதாபமாக இறந்தார். அவரது உடல் பாதுகாப்பாக எடுத்துச்செல்லப்பட்டு மயிலாப்பூரில் தகனம் செய்யப்பட்டது.

இதேபோல் சென்னை வில்லிவாக்கம் ராஜாஜி நகரைச் சேர்ந்த 81 வயதான ஓய்வுபெற்ற ஐ.சி.எப். ஊழியர், காய்ச்சல் காரணமாக கொரோனா பரிசோதனை செய்தார். அதில் அவருக்கு கொரோனா உறுதியானதால் ஐ.சி.எப். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

நேற்று அதிகாலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு ஏற்கனவே ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை வியாதி இருந்துள்ளது. அவரது உடல் கொளத்தூர் நேர்மை நகர் சுடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது. 

Next Story