போலீசார் சார்பில் டிரைவர்களுக்கு விழிப்புணர்வு


போலீசார் சார்பில் டிரைவர்களுக்கு விழிப்புணர்வு
x
தினத்தந்தி 16 Jun 2020 3:30 AM IST (Updated: 16 Jun 2020 12:06 AM IST)
t-max-icont-min-icon

போலீசார் சார்பில் டிரைவர்களுக்கு விழிப்புணர்வு.

வி.கைகாட்டி,

அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் அறிவுறுத்தலின்படி, விபத்துகள் ஏற்படுவதை தவிர்க்கும் விதமாகவும், கொரோனா வைரஸ் தடுப்பு குறித்தும் நேற்று கயர்லாபாத் போலீசார் சார்பில் டிரைவர்களுக்கு விழிப்புணர்வு நடைபெற்றது. இதற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா தலைமை தாங்கி, காட்டுப்பிரிங்கியம் அருகிலுள்ள பெரிய நாகலூர் சுண்ணாம்புக்கல் சுரங்க பகுதியில் உள்ள கனரக வாகன டிரைவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதில் டிரைவர்கள் தங்களது ஓட்டுனர் உரிமங்களை சரிவர பராமரிக்க வேண்டும். உடல் நிலையில் மாற்றங்கள் ஏற்படும் பட்சத்தில் மருத்துவ ஆலோசனைகள் பெற்று சிகிச்சை பெற வேண்டும். கண் பரிசோதனை அடிக்கடி செய்து கொள்ள வேண்டும். கனரக வாகன டிரைவர்கள் பணி முடித்து விட்டு வீட்டிற்கு செல்லும் முன்பு கைகளை சுத்தமாக கழுவ வேண்டும். பணியிடங்களிலும், வாகனங்களிலும் கிருமி நாசினி மூலம் அடிக்கடி கைகளை சுத்தம் செய்து கொள்ள வேண்டும். முக கவசம் அணிய வேண்டும். அனைவரும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். பணியிடங்களை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் என எடுத்துரைக்கப்பட்டது. பின்னர் டிரைவர்கள் அனைவரும் இன்ஸ்பெக்டர் முன்பு சாலை விதிகளை மதிப்போம். அதிவேகமாக செல்லமாட்டோம். மது அருந்திவிட்டு வாகனங்களை இயக்கமாட்டோம். அதி வேகமாக சென்று முந்திச்செல்ல மாட்டோம். வாகனங்களை முறையாக பராமரிப்போம். பணியின் போது சோர்வு களைப்பு ஏற்படும் பட்சத்தில் முறையான ஓய்வுக்குப்பிறகு வாகனங்களை இயக்குவோம். அனைவரும் சாலை விதிகளை கடைபிடித்து விபத்தில்லா மாவட்டமாக மாற்றுவோம் என டிரைவர்கள் உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.
1 More update

Next Story