கோவில் பூட்டை உடைத்து திருட்டு பணத்தை எடுத்துக்கொண்டு உண்டியல்களை வீசி சென்ற மர்மநபர்கள்


கோவில் பூட்டை உடைத்து திருட்டு பணத்தை எடுத்துக்கொண்டு உண்டியல்களை வீசி சென்ற மர்மநபர்கள்
x
தினத்தந்தி 17 Jun 2020 3:27 AM IST (Updated: 17 Jun 2020 3:27 AM IST)
t-max-icont-min-icon

கீரனூரில் கோவில் பூட்டை உடைத்து திருட்டு பணத்தை எடுத்துக்கொண்டு உண்டியல்களை வீசி சென்ற மர்மநபர்கள்.

கீரனூர்,

கீரனூர் காந்தி நகர் பகுதியில் அங்காளம்மன், விநாயகர், முருகன் கோவில்கள் அடுத்தடுத்து உள்ளன. பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்காக 3 கோவில்களிலும் சில்வர் குடத்திலான உண்டியல்கள் வைக்கப்பட்டிருந்தன. கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு உண்டியல்கள் திறக்கப்பட்டு, காணிக்கைகள் எண்ணப்பட்டபோது ரூ.30 ஆயிரம் வசூலாகியிருந்தது. பின்னர் உண்டியல்கள் திறக்கப்படவில்லை. தற்போது கொரோனா ஊரடங்கை தொடர்ந்து விநாயகர் கோவிலுக்குள் 3 உண்டியல்களும் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, கோவில் பூட்டப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் கோவில் பூட்டை உடைத்து 3 உண்டியல்களையும் திருடி அருகில் உள்ள குளத்துக்கரை முட்புதருக்குள் சென்று, அதில் இருந்த பணத்தை எடுத்துள்ளனர். பின்னர் அந்த உண்டியல்களை அப்பகுதியில் வீசிவிட்டு சென்றுள்ளனர். நேற்று கோவில் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த காந்திநகர் மக்கள், இது குறித்து கீரனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் அங்கு சென்று கோவிலையும், உண்டியல்களையும் பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story