தஞ்சை மாவட்டத்தில் ஒரே நாளில், 16 பேருக்கு கொரோனா 3 பேர் வீடு திரும்பினர்
தஞ்சை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 16 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. 3 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர்.
தஞ்சாவூர்,
தஞ்சை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் 171 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. பட்டுக்கோட்டை, திருப்பனந்தாள், திருவிடைமருதூர், பாபநாசம், மேல மணசேரி, பாப்பாநாடு, திருவையாறு அருகே உள்ள தில்லைஸ்தானம், பூதலூர், தஞ்சை, கும்பகோணம் ஆகிய பகுதிகளை சேர்ந்த 12 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்தது. மேலும் சென்னையில் இருந்து பாபநாசம் ஒன்றியம் ராஜகிரி ஊராட்சியில் பெரிய தெருவிற்கு வந்த ஒரு குடும்பத்தை சேர்ந்த 4 நபர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து அவர்கள் 4 பேரும் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்கள் 16 பேரும் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதேபோல் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் நேற்று 3 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர்.
130 பேர் குணம் அடைந்தனர்
இதன்மூலம் தஞ்சை மாவட்டத்தில் இதுவரை 130 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது 53 பேர் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Related Tags :
Next Story