அரியலூர் மாவட்டத்தில் மேலும் 12 பேருக்கு கொரோனா பெரம்பலூரில் ஒருவர் பாதிப்பு


அரியலூர் மாவட்டத்தில் மேலும் 12 பேருக்கு கொரோனா பெரம்பலூரில் ஒருவர் பாதிப்பு
x
தினத்தந்தி 23 Jun 2020 4:42 AM IST (Updated: 23 Jun 2020 4:42 AM IST)
t-max-icont-min-icon

அரியலூர் மாவட்டத்தில் மேலும் 12 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. பெரம்பலூரில் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார்.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டத்தில் ஏற்கனவே கொரோனா தொற்றால் பாதிப்புக்குள்ளான 150 பேரில் பெரம்பலூர், திருச்சி, சென்னை, அரியலூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் சிகிச்சை பெற்று 144 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

மீதமுள்ள 6 பேர் திருச்சி, பெரம்பலூர் மாவட்ட அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா கல்லை கிராமத்தை சேர்ந்த 40 வயது பெண்ணுக்கு கடந்த 17-ந் தேதி சளி- காய்ச்சல் ஏற்பட்டது. அதன்பிறகு அரியலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அந்த பெண் பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

அங்கு அந்த பெண்ணுக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து அரசு மருத்துவமனையில் உள்ள சிறப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதையடுத்து அவரது குழந்தைகள், கணவர் உள்பட 5 பேருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் இதுவரையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 151 ஆக உயர்ந்துள்ளது.

12 பேர் பாதிப்பு

அரியலூர் மாவட்டத்தில் கொரோனா வைரசால் ஏற்கனவே 420 பேர் பாதிக்கப்பட்டிருந்ததில், 390 பேர் சிகிச்சை பெற்று மருத்துவமனைகளில் இருந்து வீடு திரும்பினர். மீதமுள்ளவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் நேற்று அரியலூர் மாவட்டம் வாலாஜாநகரத்தை சேர்ந்த 36 வயதுடைய ஒரு ஆணிற்கும், ராயம்புரத்தை சேர்ந்த 37 வயதுடைய ஒரு ஆணிற்கும், 32 வயதுடைய ஒரு பெண்ணிற்கும், 1 வயது பெண் குழந்தைக்கும், புதுபாளையத்தை சேர்ந்த 27 வயதுடைய ஒரு வாலிபருக்கும், வாரியங்காவலை சேர்ந்த 70 வயது மூதாட்டிக்கும், வல்லத்தை சேர்ந்த 42 வயதுடைய ஒரு ஆணிற்கும், சோரக்குழியை சேர்ந்த 53 வயதுடைய ஒரு ஆணிற்கும், பருக்கலை சேர்ந்த 29 வயதுடைய ஒரு வாலிபருக்கும், ஸ்ரீபுரந்தானை சேர்ந்த 33 வயதுடைய ஒரு வாலிபருக்கும், கார்குடியை சேர்ந்த 50 வயதுடைய ஒரு ஆணிற்கும் என மொத்தம் 12 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது மருத்துவ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. அவர்கள் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story