100 நாள் வேலை திட்டத்தை முறைகேடின்றி செயல்படுத்த வேண்டும் கலெக்டருக்கு, பெண்கள் கோரிக்கை
100 நாள் வேலை திட்டத்தை முறைகேடின்றி செயல்படுத்த வேண்டும் என திருவாரூர் மாவட்ட கலெக்டருக்கு, பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவாரூர்,
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியம் கமலாபுரம் ஊராட்சி சேரன் நகர் பகுதியை சேர்ந்த ஜீவரேகா தலைமையில் அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் நேற்று மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
எங்கள் பகுதியில் நடைபெறும் 100 நாள் வேலை திட்டத்தில் பணிக்கு வராதவர்கள் பெயர்கள் பதிவு செய்யப்படுகிறது. இதனால் பணி பதிவு பட்டியலில் வேலைக்கு வராதவர்களுடைய வேலை அளவினை, வேலைக்கு வந்தவர்களை கொண்டு ஈடு செய்ய முயற்சிக்கின்றனர். இதனால் பணி சுமை அதிகரிப்பதால் சிரமப்படுகிறோம். மேலும் 100 நாள் வேலை பணியும் முழுமையாக நடைபெறவில்லை.
முறைகேடின்றி...
கொரோனா காலத்தில் வருமானம் இன்றி உணவு, அத்தியாவசிய தேவைக்கு சிரமப்பட்டு வருகிறோம். இதுகுறித்து புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே 100 நாள் வேலை திட்டத்தை முறைகேடின்றி செயல்படுத்த வேண்டும். 100 நாள் வேலை திட்ட பணிகளை முழுமையாக வழங்க வேண்டும். முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story