உசிலம்பட்டி அருகே அடிப்படை வசதி கேட்டு கிராம மக்கள் உண்ணாவிரதம்
உசிலம்பட்டி அருகே அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.
உசிலம்பட்டி,
உசிலம்பட்டி அருகே உள்ளது வடுகபட்டி காலனி. இங்கு 200-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் முறையாக குடிநீர் வசதி வழங்கப்படவில்லை. பொது கழிப்பறை வசதி, சாலை வசதி மற்றும் மயானத்திற்கு பாலம் கட்டிகொடுக்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பல முறை கோரிக்கை மனுக்கொடுத்தும் இன்று வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிய வருகிறது.
இதைதொடர்ந்து அடிப்படை வசதிகளை நிறைவேற்றித்தர வலியுறுத்தி வடுகபட்டி மயானத்தில் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்களும், விடுதலைச்சிறுத்தை கட்சியினரும் சேர்ந்து உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். இதில் விடுதலை சிறுத்தை கட்சியின் மாநில துணைச் செயலாளர் தென்னரசு, ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
உண்ணாவிரதம்
இதைதொடர்ந்து ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தினர், போலீசார், உசிலம்பட்டி ஆர்.டி.ஓ. ராஜ்குமார், தாசில்தார் செந்தாமரை ஆகியோர் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் பொதுமக்கள் கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றித்தரப்படும் என ஆர்.டி.ஓ. உறுதி அளித்தார் இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் உண்ணாவிரதத்தை கைவிட்டனர்.

Related Tags :
Next Story