தொப்பூரில் நிரந்தர கொரோனா பரிசோதனை மையம் அமைக்க வேண்டும்


தொப்பூரில் நிரந்தர கொரோனா பரிசோதனை மையம் அமைக்க வேண்டும்
x
தினத்தந்தி 26 Jun 2020 1:09 AM GMT (Updated: 26 Jun 2020 1:09 AM GMT)

தொப்பூரில் நிரந்தர கொரோனா பரிசோதனை மையம் அமைக்க வேண்டும் நல்லம்பள்ளி ஒன்றியக்குழு கூட்டத்தில் தீர்மானம்.

நல்லம்பள்ளி,

நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ஆலோசனைக்கூட்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் மகேஸ்வரி பெரியசாமி தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுருளிநாதன், ஷகிலா, ஒன்றியக்குழு துணைத்தலைவர் ராஜேஸ்வரி பெரியண்ணன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பொன்அரசன், மெகருனிஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 32 ஊராட்சிகளின் தற்போதைய மக்கள் தொகைக்கு ஏற்ப கூடுதலாக ஒகேனக்கல் குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தர்மபுரி மாவட்ட எல்லையான தொப்பூரில் நிரந்தரமாக கொரோனா பரிசோதனை மையம் அமைக்க வேண்டும். அந்த வழியாக வாகனங்களில் வருபவர்கள், நடந்து வருபவர்கள் என அனைவரையும் கொரோனா பரிசோதனை செய்த பின்னரே தர்மபுரி மாவட்டத்திற்குள் அனுமதிக்க வேண்டும், ஆகிய தீர்மானங்கள் இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. 

Next Story