மாவட்ட செய்திகள்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா நிவாரண தொகை கலெக்டர் கிரண்குராலா தகவல் + "||" + Corona Relief Amount for Disabled Persons in Kallakurichi District

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா நிவாரண தொகை கலெக்டர் கிரண்குராலா தகவல்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா நிவாரண தொகை கலெக்டர் கிரண்குராலா தகவல்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா நிவாரண தொகை வழங்கப்படவுள்ளது என்று கலெக்டர் கிரண்குராலா தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி,

கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவலை தடுக்க வருகிற 30-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் இந்த ஊரடங்கு காலத்தில் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தமிழகத்தில் தேசிய அடையாள அட்டை பெற்றுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.1,000 நிவாரண உதவித்தொகை வழங்கப்படும் என்றும், இந்த உதவித்தொகை அவரவர் வீட்டிலேயே நேரில் சென்று வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது.


ஆதார் அட்டை

அதன் அடிப்படையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்களது தேசிய அடையாள அட்டையின்படி அவர்களின் இருப்பிடத்திற்கு நேரில் சென்று வருகிற 29- ந்தேதி முதல் கிராம நிர்வாக அலுவலர்கள் மூலம் நிவராண தொகை ரூ.1000 வழங்கப்படும். எனவே மாற்றுத்திறனாளிகள் தங்களின் தேசிய அடையாள அட்டையின் மொத்த பக்கங்களின் நகல்கள் மற்றும் ஆதார் அட்டையின் நகல் ஆகியவற்றை தயார் நிலையில் வைத்திருந்து நிவாரணத்தொகை வழங்கும் அலுவலரிடம் வழங்க வேண்டும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. கர்நாடகத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 2 ஆயிரம் டாக்டர்கள் தயார் மந்திரி தகவல்
கர்நாடகத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 2 ஆயிரம் டாக்டர்கள் தயாராக இருப்பதாக மந்திரி சுதாகர் தெரிவித்துள்ளார்.
2. குடும்ப அட்டைதாரர்களுக்கு 2 முககவசங்கள் கலெக்டர் தொடங்கி வைத்தார்
கொரோனா தொற்று பரவலை தடுக்க குடும்ப அட்டையில் உள்ள ஒருவருக்கு தலா 2 முககவசங்கள் ரேஷன் கடை மூலம் வழங்கப்படும் என்று தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
3. கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் விநாயகர் சிலைகளை வீட்டிலேயே கரைக்க வேண்டும் கலெக்டர் உத்தரவு
கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் விநாயகர் சிலைகளை வீட்டிலேயே கரைக்க வேண்டும், சிலை கரைப்புக்காக மக்கள் வெளியே வரக்கூடாது என்று மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டு உள்ளார்.
4. சட்டவிரோத செயல்கள் நடந்தால் பொதுமக்கள் உடனடியாக புகார் தெரிவிக்கலாம் போலீஸ் சூப்பிரண்டு தகவல்
தூத்துக்குடி மாவட்டத்தில் சட்ட விரோத செயல்கள் நடந்தால் பொதுமக்கள் உடனடியாக புகார் தெரிவிக்கலாம் என்று போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தெரிவித்து உள்ளார்.
5. கொரோனா ஊரடங்கு காலத்தில் 5 கோடி புறநோயாளிகளுக்கு அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை அமைச்சர் தகவல்
கொரோனா ஊரடங்கு காலத்தில் அரசு ஆஸ்பத்திரிகளில் 5 கோடி புறநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

ஆசிரியரின் தேர்வுகள்...