மாவட்ட செய்திகள்

சாத்தூர் அருகே தொழிலாளியை கல்லால் தாக்கி கொன்ற தம்பதி + "||" + Couple killed by stone thrower near Chatur

சாத்தூர் அருகே தொழிலாளியை கல்லால் தாக்கி கொன்ற தம்பதி

சாத்தூர் அருகே தொழிலாளியை கல்லால் தாக்கி கொன்ற தம்பதி
சாத்தூர் அருகே தொழிலாளியை கல்லால் தாக்கி தம்பதி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
சாத்தூர்,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள துரைச்சாமிபுரத்தை சேர்ந்தவர், விக்னேஷ்குமார் (வயது 30). இவருடைய மனைவி தனலட்சுமி(29). இவர்களுக்கு 8 வயதில் ஒரு ஆண் குழந்தையும், 6 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது.


இந்தநிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கணவரை விட்டு பிரிந்து தனலட்சுமி குழந்தைகளுடன் சாத்தூர் அருகே உள்ள படந்தால் கிராமத்தில் தனியாக வாடகை வீட்டில் வசித்து வந்தார். இங்கு அடிக்கடி கணவர் விக்னேஷ்குமார் வந்து சென்றுள்ளார்.

நேற்று முன்தினம் நள்ளிரவு தனலட்சுமி வீட்டில் இருக்கும் போது சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளியான சதீஷ் (25) என்பவர் வந்துள்ளார். அப்போது அங்கு திடீரென விக்னேஷ்குமாரும் வந்துள்ளார்.

கல்லால் தாக்கி கொலை

உடனே சதீஷ், தன்னிடம் தவறான முறையில் நடக்க முயன்றதாக தனலட்சுமி, விக்னேஷ்குமாரிடம் கூறினாராம். இதையடுத்து கணவன், மனைவி ஆகிய 2 பேரும் சேர்ந்து சதீசின் தலையில் கல்லால் தாக்கியதாகவும், இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடி துடித்து சதீஷ் பரிதாபமாக இறந்ததாகவும் தெரியவருகிறது. பின்னர் அங்கிருந்து விக்னேஷ்குமார் தப்பி ஓடி விட்டார்.

இதையடுத்து தனலட்சுமி, சதீஷ் உறவினரான காசிராஜனை செல்போனில் தொடர்பு கொண்டு சதீஷ் ரத்த வெள்ளத்தில் கிடப்பதாக தகவல் தெரிவித்தார்.

அதை நம்பிய காசிராஜன் நேற்று காலை சாத்தூர் வந்துள்ளார். அப்போது இறந்த நிலையில் கிடந்த சதீஷ் உடலை தனியார் ஆம்புலன்ஸ் மூலமாக சிவகாசி கொண்டு செல்ல அவர் முயன்றார். இதற்கிடையே அக்கம்பக்கத்தினர் தெரிவித்த தகவலின் பேரில் சாத்தூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுபக்குமார் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் ராமசாமி தலையிலான போலீசார் ஆம்புலன்சை நிறுத்தி உடலை கைப்பற்றினர்.

பிரேத பரிசோதனை

இதையடுத்து போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் தனலட்சுமியும், விக்னேஷ்குமாரும் சேர்ந்து கல்லால் தாக்கி சதீசை கொலை செய்தது தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தனலட்சுமியை கைது செய்தனர். தப்பி ஓடிய விக்னேஷ்குமாரை வலைவீசி தேடி வருகின்றனர். பின்னர் சதீஷ் உடல் பிரேத பரிசோதனைக்காக சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 

தொடர்புடைய செய்திகள்

1. கொரடாச்சேரி ஒன்றியக்குழு தலைவர்- துணைத்தலைவர் பதவியை பிடித்த தம்பதி மறைமுக தேர்தலில் நடந்த சுவாரஸ்யம்
திருவாரூர் அருகே உள்ள கொரடாச்சேரி ஒன்றியக்குழு தலைவராக மனைவியும், துணை தலைவராக அவருடைய கணவரும் தேர்வு செய்யப்பட்டனர். மறைமுக தேர்தலில் இந்த சுவாரஸ்ய சம்பவம் நடந்தது.