மாவட்ட செய்திகள்

விவசாயிகள் போராட்டம் எதிரொலி: சாளுவனாற்றில் தூர்வாரும் பணி தொடக்கம் + "||" + Echoes of peasant struggle: Begin work in the windmill

விவசாயிகள் போராட்டம் எதிரொலி: சாளுவனாற்றில் தூர்வாரும் பணி தொடக்கம்

விவசாயிகள் போராட்டம் எதிரொலி: சாளுவனாற்றில் தூர்வாரும் பணி தொடக்கம்
விவசாயிகள் போராட்டம் எதிரொலியாக சாளுவனாற்றில் தூர்வாரும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
கோட்டூர்,

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே உள்ள சாளுவனாற்றை தூர்வாரும் பணிகளை மேற்கொள்ள வேண்டும். கஜா புயலின்போது சாளுவனாற்றில் வெள்ளம் ஏற்பட்டு தென்கரையில் உடைப்பு ஏற்பட்ட பகுதிகளில் தடுப்புச்சுவர் கட்ட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாளுவனாற்றில் இறங்கி விவசாயிகள் போராட்டம் நடத்தினர். சாளுவனாறு பாசன விவசாயிகள் சங்கத்தின் சார்பில் இந்த போராட்டம் நடந்தது.


இதேபோல் சாளுவனாற்றை தூர்வார வலியுறுத்தி பல்வேறு போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தன. இதன் எதிரொலியாக சாளுவனாற்றை தூர்வார அதிகாரிகள் திட்டமிட்டனர்.

அதிகாரிகள் ஆய்வு

அதன்படி ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் சாளுவனாற்றில் அக்கரை கோட்டகம் முதல் வங்கநகர் வரை தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை வெண்ணாறு வடிநில கோட்ட செயற்பொறியாளர் முருகவேல் ஆய்வு செய்தார். அப்போது பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.

ஆய்வின்போது உதவி செயற்பொறியாளர் கண்ணப்பன், உதவி பொறியாளர் சோலைராஜன் ஆகியோர் உடன் இருந்தனர். 

தொடர்புடைய செய்திகள்

1. துணை மின் நிலையத்தை காய்ந்த பயிர்களுடன் விவசாயிகள் முற்றுகை
துணை மின் நிலையத்தை காய்ந்த பயிர்களுடன் விவசாயிகள் முற்றுகையிட்டனர்.
2. காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்தை விரைவுபடுத்த வேண்டும்
காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்தை விரைவுப்படுத்த வேண்டும் என விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.
3. தேசிய ஊரக வேலை திட்ட பணிகள் முறையாக வழங்கவில்லை என்று கூறி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்
தேசிய ஊரக வேலை திட்ட பணிகள் முறையாக வழங்கவில்லை என்று கூறி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
4. முறையாக பொருட்கள் வழங்கக்கோரி ரேஷன் கடையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்
முறையாக பொருட்கள் வழங்கக்கோரி ரேஷன் கடையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்.
5. சர்க்கரை ஆலை முன்பு விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்
கரும்புக்கான நிலுவைத்தொகையை வழங்கக்கோரி ஆப்பக்கூடல் சர்க்கரை ஆலை முன்பு விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.