மாவட்ட செய்திகள்

சேலத்தில் புதிய உச்சம் ஒரே நாளில் 111 பேருக்கு கொரோனா + "||" + The new peak in Salem is Corona for 111 people in a single day

சேலத்தில் புதிய உச்சம் ஒரே நாளில் 111 பேருக்கு கொரோனா

சேலத்தில் புதிய உச்சம் ஒரே நாளில் 111 பேருக்கு கொரோனா
சேலத்தில் புதிய உச்சமாக ஒரே நாளில் 111 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சேலம்,

சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கொரோனா வைரசால் பாதிக்கப்படுபவர்கள் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள தனிமை வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுதவிர வெளிமாநிலம் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்தும் தினமும் ஏராளமானவர்கள் சேலத்துக்கு வந்துகொண்டே இருக்கிறார்கள். அவர்களில் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டவர்களை மருத்துவ பரிசோதனை மூலம் கண்டறிந்து சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படுகின்றனர்.


சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் கொரோனாவுக்கு 89 பேர் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்று புதிய உச்சமாக ஒரே நாளில் மட்டும் 111 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் 52 பேர். அவர்களில் புறநகரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் டாக்டர் ஒருவரும் அடங்குவார்.

எண்ணிக்கை அதிகரிப்பு

சென்னை உள்பட பிற மாவட்டங்களில் இருந்து சேலம் வந்த 29 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அமெரிக்காவில் இருந்து சேலம் வந்த 2 பேர், மாலத்தீவில் இருந்து வந்த 3 பேர் மற்றும் கர்நாடகா, கேரளா, டெல்லி, மராட்டியம் ஆகிய மாநிலங்களில் இருந்து சேலம் வந்த 25 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவர்கள் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள தனிமை வார்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

டிஸ்சார்ஜ்

இதற்கிடையே சேலம் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சேலம் மாவட்டம் மேட்டூர், ஓமலூர், ஆத்தூர், பெத்தநாயக்கன்பாளையம், சீலநாயக்கன்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 2 குழந்தைகள், 13 பெண்கள் உள்பட 24 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். 

தொடர்புடைய செய்திகள்

1. சேலத்தில் மகளுக்கு கொரோனா: வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட மூதாட்டி தற்கொலை
சேலத்தில் மகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட மூதாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
2. கர்நாடகாவில் இன்று கொரோனாவுக்கு மேலும் 73 பேர் உயிரிழப்பு
கர்நாடகாவில் இன்று கொரோனாவுக்கு மேலும் 73 பேர் உயிரிழந்துள்ளனர்.
3. உத்தரபிரதேச மந்திரிக்கு கொரோனா பாதிப்பு
உத்தரபிரதேச மந்திரிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
4. முதல் முறையாக மாஸ்க் அணிந்த அமெரிக்க அதிபர் டிரம்ப்
உலக சுகாதார மையம் வலியுறுத்திய நிலையிலும் இதுவரை முகக்கவசம் அணியாமல் இருந்த டொனால்டு டிரம்ப் முதன்முறையாக தற்போது மாஸ்க் அணிந்துள்ளார்.
5. மார்க்கெட்டில் கொரோனாவை கட்டுப்படுத்த சந்தை ஒழுங்குப்படுத்தும் குழு அமைப்பு
மார்க்கெட் பகுதிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மாநகராட்சி சார்பில் சந்தை ஒழுங்குப்படுத்தும் குழு அமைக்கப்பட்டு உள்ளதாக கமிஷனர் கோ.பிரகாஷ் தெரிவித்தார்.