குமரியில் ஒரே நாளில் 31 பேருக்கு கொரோனா கடந்த 4 நாட்களில் மட்டும் பாதிப்பு 100- ஐ தாண்டியது


குமரியில் ஒரே நாளில் 31 பேருக்கு கொரோனா கடந்த 4 நாட்களில் மட்டும் பாதிப்பு 100- ஐ தாண்டியது
x
தினத்தந்தி 27 Jun 2020 9:45 AM IST (Updated: 27 Jun 2020 9:45 AM IST)
t-max-icont-min-icon

குமரியில் ஒரே நாளில் 31 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதன்மூலம் கடந்த 4 நாட்களில் மட்டும் பாதிப்பு எண்ணிக்கை 100-ஐ தாண்டியது. இதனால் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு மேலும், மேலும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. வெளிநாடுகள், வெளிமாநிலங்கள், வெளி மாவட்டப் பகுதிகளில் இருந்து வந்தவர்கள் மூலமாகத்தான் கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்தது. தற்போது குமரி மாவட்டத்துக்குள் சில கிராமப்பகுதிகளில் தொற்று வேகமாக பரவி வருகிறது. இதன்மூலம் ஏராளமானோர் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறார்கள்.

நேற்று முன்தினம் வரையில் குமரி மாவட்டத்தில் 336 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். அவர்களில் 168 பேர் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தனர். ஒருவர் உயிரிழந்தார். மற்றவர்கள் அனைவரும் முழுமையாக குணம் அடைந்து வீடு திரும்பினர்.

இந்தநிலையில் நேற்று 31 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். அவர்களைப் பற்றிய விவரம் வருமாறு:-

பாதிப்பு விவரம்

கருங்கல் நெடியவிளாகத்தைச் சேர்ந்த 21 வயது ஆண், படந்தாளுமூடு பகுதியைச் சேர்ந்த 20 வயது ஆண், 53 வயது பெண், 66 வயது ஆண், 55 வயது ஆண், தூத்தூர் பகுதியைச் சேர்ந்த 56 வயது பெண், 25 வயது பெண், 55 வயது ஆண், 26 வயது ஆண், 29 வயது ஆண், 60 வயது பெண், 26 வயது பெண், 50 வயது ஆண், 40 வயது பெண், 36 வயது ஆண், 39 வயது பெண், 34 வயது பெண், 22 வயது பெண், 50 வயது பெண், வடக்கு குண்டல் பகுதியைச் சேர்ந்த 44 வயது பெண், வேர்க்கிளம்பி பகுதியைச் சேர்ந்த 21 வயது பெண், அஞ்சுகிராமம் அருகில் உள்ள கனகப்பபுரத்தைச் சேர்ந்த 49 வயது ஆண்,

சுசீந்திரம் ஆஸ்ராமம் பகுதியைச் சேர்ந்த 70 வயது ஆண், 28 வயது பெண், சீதப்பால் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்த 9 வயது பெண் குழந்தை, 32 வயது பெண், 28 வயது ஆண், பறக்குடிவிளை பகுதியை சேர்ந்த 40 வயது பெண், உன்னங்குளம் தோப்புவிளையைச் சேர்ந்த 29 வயது பெண், இவருடைய 3 வயது பெண் குழந்தை, தக்கலை சுண்டவிளையைச் சேர்ந்த 59 வயது பெண் ஆகிய 31 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் குவைத்தில் இருந்து ஒரு பெண் வந்துள்ளார். 14 பேர் தூத்தூரில் பாதிப்புக்கு உள்ளானவர்கள். சிலர் கொரோனா பாதிப்பு நோயாளிகளுடன் தொடர்பில் இருந்தவர்கள் ஆவர்.

367 ஆக உயர்வு

இதனால் குமரி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 367 ஆக உயர்ந்துள்ளது. ஆஸ்பத்திரியில் 199 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதற்கிடையே கடந்த 4 நாட்களில் மட்டும் பாதிப்பு எண்ணிக்கை 100-ஐ தாண்டியது. தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மாவட்ட நிர்வாகம் நோய் தடுப்பு பணிகளை தீவிரப்படுத்தி உள்ளது.

ஆங்காங்கே கிருமி நாசினி தெளித்தல், பாதிக்கப்பட்ட பகுதிகளை சீல் வைத்து மக்களை தனிமைப்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

Next Story