விருத்தாசலம் அருகே வட்டிக்கடை உரிமையாளரை தாக்கி நகை-பணம் கொள்ளை
விருத்தாசலம் அருகே வட்டிக்கடை உரிமையாளரை தாக்கி நகை-பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
விருத்தாசலம்,
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சியை சேர்ந்தவர் இளவரசன்(வயது 51). இவர் கருவேப்பிலங் குறிச்சியில் வட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவருடைய மனைவி வீரலட்சுமி.
இளவரசன் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு ஒரு பையில் 5 பவுன் நகை, லாக்கர் சாவிகள், ரூ.50 ஆயிரம் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் வந்தார். பின்னர் அதனை வீட்டில் ஒரு இடத்தில் வைத்துவிட்டு இளவரசனும், வீரலட்சுமியும் தூங்கினர்.
நகை-பணம் கொள்ளை
இந்த நிலையில் நள்ளிரவில் வீட்டுக்கு வந்த மர்மநபர்கள், வீட்டின் பின்பக்க கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றனர். பின்னர் வீட்டில் இருந்த 5 பவுன் நகை, ரூ.50 ஆயிரம் ஆகியவற்றை கொள்ளையடித்தனர். இந்த சத்தம் கேட்டு இளவரசன் திடுக்கிட்டு எழுந்து மர்மநபர்களை பிடிக்க முயன்றார்.
அப்போது அவர்கள், இளவரசனை சரமாரியாக தாக்கினர். இதில் அவர் சரிந்து விழுந்தார். இதையடுத்து வீரலட்சுமியின் கழுத்தில் கிடந்த தங்க சங்கிலியை பறிக்க முயன்றனர். அதற்குள் வீரலட்சுமி சத்தம் போட்டதால் மர்மநபர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். இதையடுத்து இந்த சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்தனர். பின்னர் காயமடைந்த இளவரசனை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. கொள்ளை போன நகை, பணத்தின் மதிப்பு ரூ.1½ லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
சூப்பிரண்டு விசாரணை
இந்த சம்பவம் பற்றி அறிந்த விருத்தாசலம் துணை போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன், இன்ஸ்பெக்டர் பாலகிருஷ் ணன், சப்-இன்ஸ்பெக்டர் விநாயகமுருகன் மற்றும் கருவேப்பிலங்குறிச்சி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இளவரசன் மற்றும் அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினார். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய கொள்ளையர் களை உடனே பிடிக்க போலீசாருக்கு உத்தர விட்டார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
நள்ளிரவில் வட்டிக்கடை உரிமையாளரை தாக்கி 5 பவுன் நகை மற்றும் ரூ.50 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.

Related Tags :
Next Story