மாவட்ட செய்திகள்

ராமநாதபுரம் மாவட்டத்தில் 74 பேருக்கு கொரோனா + "||" + Corona for 74 people in Ramanathapuram district

ராமநாதபுரம் மாவட்டத்தில் 74 பேருக்கு கொரோனா

ராமநாதபுரம் மாவட்டத்தில் 74 பேருக்கு கொரோனா
ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று ஒரேநாளில் 74 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 663 ஆக இருந்தது. இந்த நிலையில் நேற்று ராமநாதபுரம் ஓம்சக்தி நகரில் 23 வயது பெண், ரோஸ்நகரில் 56 வயது நபர், காவலர் குடியிருப்பில் 31 வயது நபர், பாரதியார்தெருவில் 27 வயது நபர், கீழக்கரையில் 27, 29 வயது நபர்கள், பாண்டியூர் காலனியில் 26 வயது பெண், இளையான்குடி செபஸ்தியார்புரம் 27 வயது பெண், ராமேசுவரம் புதுரோடு 23 வயது பெண், ஆர்.எஸ்.மங்கலம் செட்டியமடையில் 50 வயது நபர், கீழக்கரை தட்டாந்தோப்பில் 50 வயது நபர், தொண்டி நடுத்தெரு 45 வயது நபர், மேமங்கலம் வடக்குத்தெரு 26 வயது பெண், ராமநாதபுரம் மதுரையார்தெரு 25 வயது பெண், நேருநகர் 35 வயது நபர், காரங்காடு காலனி தெரு 35 வயது பெண் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.


தொண்டி காந்தியார்தெருவில் 35 வயது பெண், அவரின் மகள், பிச்சை ராவுத்தர் தெரு 40 வயது நபர், புதுப்பட்டினம் 26 வயது நபர், 20 வயது பெண், வெள்ளையபுரம் 26 வயது நபர், 43 வயது நபர், 31 , 23 வயது நபர்கள், ஓரியூர் 23 வயது நபர், மங்களக்குடி 23, 29 வயது பெண்கள், விசம்பூர் 22 வயது பெண், கீழக்கொடுமலூர் 40 வயது நபர், முதுகுளத்தூர் ஆசாரி தெரு 33 வயது பெண், தபால் அலுவலக தெரு 48 வயது பெண், தலைவணங்கான்பட்டி 25 மற்றும் 20 வயது நபர்கள், எம்.எம்.கோட்டை 35 வயது நபர், கமுதி 24 வயது நபர், கமுதி புதுக்கோட்டை 65 வயது நபர், காமராஜபுரம் 23 வயது பெண், சாயல்குடி 29 வயது பெண், 47 வயது நபர், வி.வி.ஆர்.நகர் 50 வயது பெண், சாயல்குடி 18 வயது பெண், 6 வயது ஆண் குழந்தை, 8 மாத ஆண்குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

737 பேர்

பரமக்குடி வைகை நகரில் 30 வயது நபர், பாண்டியன் தெருவில் 40 வயது நபர், மண்டபத்தில் 53 வயது நபர், 56, 30, 28 வயது நபர்கள், வட்டாண்வலசை 25,29 வயது நபர்கள், சாத்தான்குளம் 21 வயது பெண், 30 வயது நபர், தாமரைக்குளம் 25 வயது பெண் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மண்டபம் மேற்குத்தெரு 24 வயது பெண், சேதுநகர் 25 வயது பெண், மண்டபம் கேம்ப் 26 வயது பெண், பரமக்குடி பாரதிநகர் 33 வயது பெண், 47 வயது பெண், முதுகுளத்தூர் மீனாட்சிபுரம் 39 வயது பெண், கோனேரியேந்தல் 40 வயது பெண், பரமக்குடி கிருஷ்ணா தியேட்டர் பகுதியில் 52 வயது நபர், ஓட்டபாலம் முருகன்கோவில் தெருவில் 48 வயது நபர், சின்னக்கடை தெரு 65 வயது நபர், 55 வயது மனைவி, திருநகர் 69 வயது நபர், வைத்தியர்தெரு 22 வயது பெண், தலைக்கால் 38 வயது பெண், சிவகங்கை கருங்குளம் 26 வயது பெண், பரமக்குடி வைகை நகர் 34 வயது பெண், பிள்ளையார்கோவில்தெரு 30 வயது நபர், மஞ்சள்பட்டணம் 33 வயது நபர், கடலாடி கே.சத்திரம் 30 வயது பெண் என மொத்தம் 74 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மாவட்டத்தில் நோய்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 737 ஆக உயர்ந்துள்ளது.

தடுப்பு நடவடிக்கை

நோய்த்தொற்று கண்டறியப்பட்டவர்கள் வசிக்கும் பகுதிகளில் நோய் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அந்தந்த பகுதிகளில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதுடன் அப்பகுதியை சேர்ந்தவர்களுக்கு நோய்த்தொற்று உள்ளதா என்றும் பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் கணிசமாக உயர்ந்து வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. கர்நாடகாவில் கொரோனாவுக்கு அதிகரிக்கும் உயிரிழப்பு: மேலும் 87 பேர் பலி
கர்நாடகாவில் இன்று கொரோனாவுக்கு மேலும் 87 பேர் உயிரிழந்துள்ளனர்.
2. மாவட்டத்தில் கோரிக்கை அட்டையுடன் தூய்மை பணியாளர்கள் போராட்டம்
தர்மபுரி மாவட்டத்தில் தூய்மை பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கை அட்டையுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
3. கர்நாடகாவில் இன்று கொரோனாவுக்கு மேலும் 73 பேர் உயிரிழப்பு
கர்நாடகாவில் இன்று கொரோனாவுக்கு மேலும் 73 பேர் உயிரிழந்துள்ளனர்.
4. மாவட்டத்தில் முழு ஊரடங்கால் சாலைகள் வெறிச்சோடின கடைகள் அடைப்பு
கரூர் மாவட்டத்தில் முழு ஊரடங்கையொட்டி கடைகள் அடைக்கப்பட்டன. மேலும் சாலைகள் அனைத்து வெறிச்சோடி காணப்பட்டன.
5. உத்தரபிரதேச மந்திரிக்கு கொரோனா பாதிப்பு
உத்தரபிரதேச மந்திரிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.