மாவட்ட செய்திகள்

விருதுநகரில் பரிதாபம்: கொரோனா பரிசோதனைக்கு சென்ற கணவர் சாவு; அதிர்ச்சியில் ஆசிரியை தற்கொலை + "||" + Mourning in Virudhunagar: Husband dies after coronation test; Teacher suicide in shock

விருதுநகரில் பரிதாபம்: கொரோனா பரிசோதனைக்கு சென்ற கணவர் சாவு; அதிர்ச்சியில் ஆசிரியை தற்கொலை

விருதுநகரில் பரிதாபம்: கொரோனா பரிசோதனைக்கு சென்ற கணவர் சாவு; அதிர்ச்சியில் ஆசிரியை தற்கொலை
விருதுநகரில் கொரோனா பரிசோதனைக்கு சென்ற கணவர் இறந்த அதிர்ச்சியில் ஆசிரியை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
விருதுநகர்,

விருதுநகர் லட்சுமிகாலனியை சேர்ந்தவர் பிரபாகரன். ரெயில்வே துறையில் அலுவலராக பணியாற்றிய இவர் கொரோனா அறிகுறியுடன் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனையில் இவருக்கு கொரோனா உறுதி செய்யப்படவில்லை. இருப்பினும் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று இவர் அரசு ஆஸ்பத்திரியில் பரிதாபமாக உயிரிழந்தார். இதற்கிடையே பிரபாகரனுக்கு கொரோனா அறிகுறி இருந்ததாக கூறப்பட்டதால் அவரது மனைவி ரமாபிரபா (வயது 47) வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தார்.


ஆசிரியை தற்கொலை

விருதுநகரில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றிய இவர் நேற்று காலை கணவர் உயிரிழந்த தகவல் கேட்டு அதிர்ச்சி அடைந்தார்.

பிரபாகரனின் உடல் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் இருந்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு விருதுநகர் மயானத்திற்கு நேரடியாக கொண்டு செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது. இறுதி சடங்குகள் முடிந்த நிலையில், கணவர் இறந்த துக்கம் தாங்காத ஆசிரியை ரமாபிரபா வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த அறையிலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து விருதுநகர் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மதுரையில் கொரோனாவுக்கு 6 பேர் சாவு ; புதிதாக 192 பேருக்கு நோய் தொற்று
மதுரையில் கொரோனாவுக்கு 6 பேர் உயிரிழந்தனர். இதுபோல் நேற்று புதிதாக 192 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
2. கோவை, நீலகிரியில்7 பேர் கொரோனாவுக்கு பலி
கோவை, நீலகிரியில் 7 பேர் கொரோனாவுக்கு பலியானார்கள்.
3. கரூர் அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு ஒருவர் பலி
கரூர் அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு ஒருவர் பலியானார்.
4. கொரோனாவுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் என்ன? - முதல்-அமைச்சருடன்,மத்திய குழுவினர் ஆலோசனை
தமிழகத்தில் கொரோனா தொற்றுள்ளவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் பற்றி சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் மத்திய குழுவினர் நேற்று ஆலோசனை நடத்தினர்.
5. கொரோனாவினால் ரத்து செய்யப்பட்ட விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்க இருந்த வீரர்களுக்கு பரிசுத்தொகை வழங்க முடிவு
கொரோனாவினால் ரத்து செய்யப்பட்ட விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்க இருந்த வீரர்களுக்கு பரிசுத்தொகை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.