மாவட்ட செய்திகள்

தூத்துக்குடியில் மேலும் 43 பேருக்கு கொரோனா நெல்லை- தென்காசியில் 23 பேர் பாதிப்பு + "||" + 43 more people in Thoothukudi Corona paddy landslide affects 23 people in South Asia

தூத்துக்குடியில் மேலும் 43 பேருக்கு கொரோனா நெல்லை- தென்காசியில் 23 பேர் பாதிப்பு

தூத்துக்குடியில் மேலும் 43 பேருக்கு கொரோனா நெல்லை- தென்காசியில் 23 பேர் பாதிப்பு
தூத்துக்குடியில் நேற்று 43 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. நெல்லை, தென்காசியில் 23 பேர் பாதிக்கப்பட்டனர்.
தென்காசி,

தூததுக்குடி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 43 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதில் கோவில்பட்டி அருகே இளையரசனேந்தல் பகுதியைச் சேர்ந்த பெண் வருவாய் ஆய்வாளர், கொல்லம்பரம்பு பகுதியைச் சேர்ந்த கிராம நிர்வாக உதவியாளர் உள்ளிட்டவர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.


இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 832 ஆக உயர்ந்தது.

நெல்லையில் 12 பேர்

நெல்லை மாவட்டத்துக்கு வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்களால் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று நெல்லை மாவட்டத்தில் 12 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் ஒருவர் வெளி மாநிலத்தில் இருந்து வந்தவர் ஆவார். மீதி உள்ள 11 பேர் நெல்லை மாநகர பகுதியை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

இதில் நெல்லை சிந்துபூந்துறை பகுதியில் வசித்து வரும் ஒரு நர்சு, பாளையங்கோட்டை மண்டல பகுதியில் 2 வங்கி ஊழியர்கள், நெல்லை டவுன் பகுதியை சேர்ந்த 2 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் பெண் போலீஸ் ஒருவருக்கும் தொற்று பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் உள்ள குடியிருப்பு தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு உள்ளது. கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் சுகாதாரப்பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.

நெல்லை மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 723 ஆக உயர்ந்துள்ளது.

தென்காசி

தென்காசி மாவட்டத்தில் மொத்தம் 11 பேருக்கு நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் தென்காசி பகுதியை சேர்ந்த 5 பேர், கடையநல்லூர் பகுதியை சேர்ந்த 2 பேர், ஆலங்குளம் பகுதியை சேர்ந்த 2 பேர், கீழப்பாவூர், கடையம் பகுதியை சேர்ந்த தலா ஒருவர் ஆவர்.

அவர்கள் அனைவரும் தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வரப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் வசித்து வந்த பகுதியில் கிருமிநாசினி தெளிக் கப்பட்டது. நேற்றைய நிலவரப்படி தென்காசி மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 303 ஆக உயர்ந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனாவின் 2-வது அலை வீசினால் 34 கோடி பேருக்கு வேலை பறிபோகும் ?
கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு, ஒவ்வொரு நாளும் புதிய உச்சங்களை தொடுவது தொடர்கதையாய் நீளுகிறது. நேற்றைய நிலவரப்படி உலகளவில் 1 கோடியே 5 லட்சம் பேரை இந்த தொற்று பாதித்து இருக்கிறது. 5 லட்சத்து 12 ஆயிரம் உயிரிழப்புகளை ஏற்படுத்தி உள்ளது.
2. கொரோனாவை தொடர்ந்து புதிய வைரஸ் பரவல்: சீனாவுடன் ஒத்துழைப்பை நாடுகிறது உலக சுகாதார நிறுவனம்
கொரோனா வைரசைத் தொடர்ந்து புதிய வைரஸ் பரவும் விவகாரத்தில் சீனாவின் ஒத்துழைப்பை உலக சுகாதார நிறுவனம் நாடி உள்ளது.
3. ‘கொரோனா பாதிப்பு மோசமாகவில்லை என்ற எண்ணத்தை உருவாக்க அரசு முயற்சி’ - ராகுல் காந்தி குற்றச்சாட்டு
“கொரோனா பாதிப்பு மோசமாகவில்லை என்ற எண்ணத்தை உருவாக்க அரசாங்கங்கள் முயற்சிப்பதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.
4. கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட ஹபீஸ் உள்பட 6 பாகிஸ்தான் வீரர்கள் இங்கிலாந்து செல்கிறார்கள்
கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட முகமது ஹபீஸ் உள்பட 6 பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் இங்கிலாந்துக்கு பயணிக்க உள்ளனர்.
5. கொரோனா பரவலை கட்டுப்படுத்த நெல்லையில் டீக்கடைகள் காலை 9 மணி வரை மட்டுமே செயல்படும் - கலெக்டர் ஷில்பா உத்தரவு
கொரோனா பரவலை கட்டுப்படுத்த நெல்லை மாநகரில் காலை 9 மணி வரை மட்டுமே டீக்கடைகள் செயல்படும் என்று கலெக்டர் ஷில்பா உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-