அரியலூரில் 3 பேருக்கு கொரோனா பெரம்பலூரில் முதியவருக்கு பாதிப்பு
அரியலூரில் புதிதாக 3 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். பெரம்பலூரில் முதியவர் ஒருவர் பாதிப்புக்குள்ளாகி உள்ளார்.
அரியலூர்,
அரியலூர் மாவட்டத்தில் கொரோனா வைரசால் ஏற்கனவே 458 பேர் பாதிக்கப்பட்டிருந்ததில், 400 பேர் சிகிச்சை பெற்று மருத்துவமனைகளில் இருந்து வீடு திரும்பி இருந்தனர். 58 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் மராட்டிய மாநிலத்தில் இருந்து அரியலூர் மாவட்டத்திற்கு திரும்பி வந்த திருமானூர் ஊராட்சி ஒன்றிய பகுதியை சேர்ந்த 35 வயதுடைய ஆண் மற்றும் திருச்சி மாவட்டத்தில் இருந்து வந்த அரியலூர் சிட்டி பாபு தெருவை சேர்ந்த 25 வயதுடைய ஆண், கும்பகோணம் சென்று வந்த மருதூர் திரபதி அம்மன் கோவிலை சேர்ந்த 52 வயதுடைய பெண் என மொத்தம் 3 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது மருத்துவ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. அவர்களில் 2 பேர் அரியலூர் அரசு மருத்துவமனையிலும், மற்றொருவர் திருச்சி தனியார் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் அரியலூர் மாவட்டத்தில் 164 பேரின் சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.
பெரம்பலூரில் ஒருவர் பாதிப்பு
இதேபோல் கர்நாடகம் மாநிலம் ஓசூரில் இருந்து பெரம்பலூர் மாவட்டத்திற்கு திரும்பி வந்த சுமை தூக்கும் தொழிலாளி வேப்பூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட முருக்கன்குடியை சேர்ந்த 60 வயது முதியவர் ஒருவர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 162 ஆக உயர்ந்துள்ளது. இதில் 147 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :
Next Story