மாவட்ட செய்திகள்

சீர்காழியில் படுகாயத்துடன் வீட்டில் பிணமாக கிடந்த ஓய்வு பெற்ற பெண் மருத்துவ அதிகாரி கொலையா? போலீசார் விசாரணை + "||" + Retired female medical officer murdered at home Police are investigating

சீர்காழியில் படுகாயத்துடன் வீட்டில் பிணமாக கிடந்த ஓய்வு பெற்ற பெண் மருத்துவ அதிகாரி கொலையா? போலீசார் விசாரணை

சீர்காழியில் படுகாயத்துடன் வீட்டில் பிணமாக கிடந்த ஓய்வு பெற்ற பெண் மருத்துவ அதிகாரி கொலையா? போலீசார் விசாரணை
சீர்காழியில் ஓய்வு பெற்ற பெண் மருத்துவ அதிகாரி வீட்டில் படுகாயத்துடன் பிணமாக கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சீர்காழி,

நாகை மாவட்டம் சீர்காழி வி.என்.எஸ். நகரை சேர்ந்தவர் சுதந்திரா (வயது78). டாக்டர். திருமணமாகாதவர். இவர் கொள்ளிடம் வட்டார மருத்துவ அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். வீட்டில் தனியாக வசித்து வந்த இவர் ஏழை, எளிய மக்களுக்கு மருத்துவம் பார்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று காலை சுதந்திரா தனது வீட்டின் மாடிப்படி அருகே தலையில் பலத்த காயத்துடன் ரத்தம் வழிந்தபடி மர்மமான முறையில் பிணமாக கிடந்தார்.


இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சீர்காழி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று டாக்டர் சுதந்திராவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் விசாரணை

இதுதொடர்பாக அவருடைய உறவினர் சிதம்பரத்தை சேர்ந்த டாக்டர் சுப்பிரமணியன் அளித்த புகாரின் பேரில் போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து உள்ளனர். மேலும் அவர் எப்படி இறந்தார்? கொலை செய்யப்பட்டாரா? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஓய்வு பெற்ற பெண் மருத்துவ அதிகாரி ஒருவர் தனது வீட்டில் மர்மமான முறையில் படுகாயத்துடன் பிணமாக கிடந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. சாத்தான்குளம் தந்தை - மகன் மரணம் : போலீசார் மீது வழக்குப்பதிவு செய்யும் முகாந்திரம் உள்ளது- மதுரை ஐகோர்ட் கிளை
சாத்தான்குளம் சம்பவத்தில் போலீசார் மீது வழக்குப்பதிவு செய்யும் முகாந்திரம் உள்ளது என்று மதுரை ஐகோர்ட் கிளை தெரிவித்துள்ளது.
2. வெளியூர்களில் இருந்து சரக்கு ஏற்றி வரும் வாகனங்கள், விழுப்புரம் நகருக்குள் வர தடை போலீசார் தீவிர சோதனை
வெளியூர்களில் இருந்து சரக்கு ஏற்றி வரும் வாகனங்கள் விழுப்புரம் நகருக்குள் வர போலீசார் தடை விதித்து தீவிர சோதனை செய்து வருகின்றனர்.
3. காரிமங்கலம் அருகே கட்டிட மேஸ்திரி வீட்டில் நகை, பணம் கொள்ளை மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
காரிமங்கலம் அருகே கட்டிட மேஸ்திரி வீட்டில் கள்ளச்சாவி போட்டு மர்ம நபர்கள் 30 பவுன் நகை, ரூ.1 லட்சத்தை கொள்ளை அடித்து சென்றனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
4. ஊரடங்கு உத்தரவை மீறிய ஆட்டோ டிரைவர்களுக்கு போலீசார் அறிவுரை
ஊரடங்கு உத்தரவை மீறிய ஆட்டோ டிரைவர்களுக்கு போலீசார் அறிவுரை.
5. பட்டுக்கோட்டை அருகே கழுத்தை அறுத்து பழ வியாபாரி கொலை போலீசார் விசாரணை
பட்டுக்கோட்டை அருகே பாலத்தின் அடியில் பழ வியாபாரி, கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.