செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியது


செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியது
x
தினத்தந்தி 29 Jun 2020 5:15 AM GMT (Updated: 29 Jun 2020 5:15 AM GMT)

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியது. நேற்று ஒரே நாளில் 5 பேர் பலியானார்கள்.

வண்டலூர்,

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியது. நேற்று காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் அடங்கிய கிராம பகுதியில் 22 பேர், மறைமலைநகர் நகராட்சி பகுதியில் 3 பேர், நந்திவரம்கூடுவாஞ்சேரி பேரூராட்சி பகுதியில் 3 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இவர்களுடன் செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 183 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,051 ஆக உயர்ந்தது. இவர்களில் 2,644 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று 86 வயது, 85 வயது மூதாட்டிகள், 64 வயது முதியவர், 50 வயது ஆண், 29 வயது வாலிபர் ஆகிய 5 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் பலியானவர்களின் எண்ணிக்கை 80 ஆக உயர்ந்தது. மற்றவர்கள் தொடர்ந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

2 போலீசாருக்கு கொரோனா

காஞ்சீபுரம் நகர துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பணியாற்றும் 2 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதேபோல் படப்பை ஊராட்சியில் உள்ள விவேகானந்தர் நகரை சேர்ந்த 32 வயது வாலிபர், மலைப்பட்டு பகுதியை சேர்ந்த 34 வயது பெண், 52 வயது பெண் ஆகியோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இவர்களுடன் காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 92 பேர் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,791 ஆனது. இவர்களில் 779 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். 993 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று படப்பை அடுத்த வரதராஜபுரம் ஊராட்சியில் உள்ள ராயப்பா நகரை சேர்ந்த 65 வயது முதியவர் கொரோனாவால் பலியானார். இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 19 ஆனது.

பெரியபாளையம்

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், நெய்வேலி ஊராட்சி அம்பேத்கர் நகரைச் சேர்ந்த 12 வயது சிறுவன், வெங்கல் ஊராட்சி சாய் கிருஷ்ணா கார்டன் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுவன், வெங்கல் பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த 62 வயது முதியவர், வடமதுரை ஊராட்சி பேட்டை மேடு பகுதியைச் சேர்ந்த 45 வயது பெண், பெரியபாளையம் ஊராட்சி தண்டு மாநகர் பகுதியைச் சேர்ந்த 45 வயது ஆண், அக்கரப்பாக்கம் பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த 34 வயது வாலிபர், கொசவன்பேட்டை ஊராட்சி ராள்ளபாடி கிராமத்தைச் சேர்ந்த 50 வயது பெண் என 7 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.

இவர்களுடன் திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று 99 பேர் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,524 ஆனது. இவர்களில் 2,156 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். 1,307 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று எல்லாபுரம் ஒன்றியம், வடமதுரை ஊராட்சி, மல்லியங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த 85 வயது முதியவர் கொரோனாவால் பலியானார். இதனால் மாவட்டத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 61 ஆனது.

Next Story