மாவட்ட செய்திகள்

கொளத்தூரில் ஐ.ஏ.எஸ். அதிகாரியின் தாய் கொரோனாவால் பலி + "||" + IAS in Colombo The officer's mother kills Corona

கொளத்தூரில் ஐ.ஏ.எஸ். அதிகாரியின் தாய் கொரோனாவால் பலி

கொளத்தூரில் ஐ.ஏ.எஸ். அதிகாரியின் தாய் கொரோனாவால் பலி
கொளத்தூரில் ஐ.ஏ.எஸ். அதிகாரியின் தாய், கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார்.
திரு.வி.க.நகர்,

சென்னையில் கொரோனா வைரஸ் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. சென்னை மாநகராட்சி திரு.வி.க. நகர் மண்டலத்துக்கு உட்பட்ட கொளத்தூர், தயாளு நகரில் வசித்து வந்தவர் பார்வதி(வயது 67). இவரது கணவர் பரமசிவம், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு உடல்நலம் இன்றி இறந்துவிட்டார். பார்வதியின் மகன் ஆனந்த். ஐ.ஏ.எஸ். அதிகாரியான இவர், கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பணியாற்றி வருகிறார். கடந்த 22-ந் தேதி பார்வதிக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டது.


கொரோனாவால் பலி

அதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. உடனடியாக அவர் சிகிச்சைக்கு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு பார்வதி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடல் நேற்று மதியம் கொளத்தூர் நேர்மை நகரில் தகனம் செய்யப்பட்டது. தற்போது ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆனந்த் மற்றும் அவருடைய மனைவி பார்வதி இருவரும் தங்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. பிரசவத்துக்கு சென்ற போது துயரம் மரத்தில் ஆம்புலன்ஸ் மோதி கர்ப்பிணி உள்பட 3 பெண்கள் பலி
பிரசவத்துக்கு சென்ற போது, மரத்தில் ஆம்புலன்ஸ் மோதியதில் கர்ப்பிணி உள்பட 3 பெண்கள் பலியாகினர்.
2. கொரோனாவால் நுரையீரல் பாதித்த டாக்டருக்கு உதவ ரூ.20 லட்சம் திரட்டிய கிராம மக்கள்
கொரோனாவால் நுரையீரல் பாதித்த டாக்டருக்கு உதவ கிராம மக்கள் ரூ.20 லட்சம் திரட்டினர். அதே சமயம் மொத்த செலவையும் ஆந்திர அரசு ஏற்றது.
3. துணி துவைக்கும்போது மின்சாரம் தாக்கி பெண் பலி
வீட்டில் துணி துவைக்கும் போது மின்சாரம் தாக்கி சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியின் பெண் ஊழியர் பரிதாபமாக இறந்தார்.
4. நடைபயிற்சியின் போது பஸ் மோதி தி.மு.க. பிரமுகர் பலி
நடைபயிற்சியின் போது பஸ் மோதி தி.மு.க. பிரமுகர் பரிதாபமாக இறந்தார்.
5. நடைபயிற்சியின் போது பஸ் மோதி தி.மு.க. பிரமுகர் பலி
நடைபயிற்சி சென்ற போது பஸ் மோதிய விபத்தில் தி.மு.க. பிரமுகர் பரிதாபமாக இறந்தார்.