மாவட்ட செய்திகள்

மும்பையில் மக்கள் நெருக்கடியை குறைக்க பீகார், உத்தரபிரதேசத்தில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் சிவசேனா கருத்து + "||" + In Bihar, Uttar Pradesh Infrastructure needs to be upgraded Shiv Sena comment

மும்பையில் மக்கள் நெருக்கடியை குறைக்க பீகார், உத்தரபிரதேசத்தில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் சிவசேனா கருத்து

மும்பையில் மக்கள் நெருக்கடியை குறைக்க  பீகார், உத்தரபிரதேசத்தில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் சிவசேனா கருத்து
மும்பையில் மக்கள் நெருக்கடியை குறைக்க பீகார், உத்தரபிரதேசத்தில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என சிவசேனா கூறி உள்ளது.
மும்பை,

மத்திய நெடுஞ்சாலை துறை மந்திரி நிதின் கட்காரி கடந்த மாதம் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு, மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள மும்பையில் பேரழிவு ஆபத்து உள்ளது. எனவே அங்கு நிலவும் நெருக்கத்தை குறைக்க வேண்டும் என கூறியிருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில் சிவசேனா கட்சியின் சாம்னா பத்திரிகையில் கூறியிருப்பதாவது:-


மும்பை, புனே போல உத்தரபிரதேசத்திலும், பீகாரிலும் ஸ்மார்ட் நகரங்கள் அமைத்தால் மும்பை மற்றும் புனேயில் இயற்கையாகவே மக்கள் நெருக்கம் குறைந்துவிடும். அந்த மாநிலங்களில் முதலில் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும்.

ஊரடங்கு தொடங்கிய போது 8 லட்சம் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் மும்பையில் இருந்து உத்தரபிரதேசம், பீகார், மேற்கு வங்கம், ஒடிசா போன்ற மாநிலங்களுக்கு சென்றனர். புனேயில் இருந்து 3 லட்சம் பேர் சென்றனர். தற்போது சுமார் 1½ லட்சம் தொழிலாளர்கள் மீண்டும் மராட்டியம் திரும்பி உள்ளனர். அவர்களுக்கு சொந்த மாநிலத்தில் எந்த ேவலையும் இல்லை. அந்த மாநிலங்கள் வளர்ச்சி அடையவில்லை என்பது தான் இதற்கு காரணம்.

எனவே அந்த மாநிலங்களில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டாலே கட்காரியின் கவலை தானாக தீர்க்கப்படும். மராட்டியத்துக்கு திரும்பும் தொழிலாளர்களால் மும்பை, புனே நகரங்களுக்கு சுமை அதிகரித்து உள்ளது. மும்பை நாட்டின் மக்கள் தொகை சுமையையும் மற்றும் கருவூலத்துக்கும் அதிகளவில் பங்களித்து வருகிறது. ஆனால் கொரோனாவுக்கு எதிராக போராட உரிய பங்கு மத்திய அரசிடம் இருந்து அதற்கு கிடைக்கவில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா முகாமில் அட்டகாசம்: பெண்களை அழைத்து வந்து நடன நிகழ்ச்சி நடத்திய சம்பவம்
பீகாரில் கொரோனா முகாமில் பெண்களை அழைத்து வந்து நடன நிகழ்ச்சி நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
2. சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க கோரி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற பீகார் தொழிலாளர்கள்
சேலத்தில் பல்வேறு இடங்களில் வேலை செய்த பீகார் மாநில தொழிலாளர்கள் தங்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க கோரி நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு நிலவியது.
3. பீகாரில் மேலும் 11 பேருக்கு கொரோனா தொற்று- மொத்த பாதிப்பு 707 ஆக உயர்வு
பீகாரில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 707 ஆக உயர்ந்துள்ளது.
4. பீகாரில் ஒரே குடும்பத்தில் 23 பேருக்கு கொரோனா - ஓமன் நாட்டில் இருந்து வந்த இளைஞர் மூலம் பரவியது
பீகார் மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ஒரே குடும்பத்தில் 23 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதும், ஓமன் நாட்டில் இருந்து திரும்பிய ஒரு இளைஞர் மூலம் இது பரவி இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது.
5. பீகாரில் சாலை விபத்து ; 11 பேர் பலி, 4 பேர் படுகாயம்
பீகாரில் காரும் டிராக்டரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 11 பேர் பலியாகினர்.