பரங்கிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணியாற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலருக்கு கொரோனா


பரங்கிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணியாற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலருக்கு கொரோனா
x
தினத்தந்தி 3 July 2020 4:56 AM IST (Updated: 3 July 2020 4:56 AM IST)
t-max-icont-min-icon

பரங்கிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணியாற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலருக்கு கொரோனா உறுதியானது.

தாம்பரம்,

சென்னையை அடுத்த சிட்லபாக்கத்தில் பரங்கிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு பணிபுரியும் துணை வட்டார வளர்ச்சி அலுவலருக்கு நேற்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இவரது வீடு குன்றத்தூரில் உள்ளது. துணை வட்டார வளர்ச்சி அலுவலருக்கு தொற்று உறுதியானதால் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை இடமாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி ஆலந்தூர் மண்டலத்தில் 26 பேருக்கும், அடையாறு மண்டலத்தில் 63 பேருக்கும், பெருங்குடி மண்டலத்தில் 110 பேருக்கும், சோழிங்கநல்லூர் மண்டலத்தில் 37 பேருக்கும் என 236 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் ஊரடங்கால் பல்வேறு நாடுகளில் சிக்கித்தவித்த 20 ஆயிரத்து 463 பேர் சிறப்பு விமானங்களில் சென்னை அழைத்து வரப்பட்டு, மருத்துவ பரிசோதனைக்கு பிறகு முகாம்களில் தனிமைப்படுத்தப்பட்டனர். இவர்களில் ஏற்கனவே 398 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

இந்த நிலையில் முகாமில் தங்கி இருந்தவர்களில் சவுதி அரேபியாவில் இருந்து வந்த 3 பேருக்கும், பக்ரைன், ஓமன், குவைத் ஆகிய நாடுகளில் இருந்து வந்த தலா ஒருவருக்கும் என மேலும் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு முனையத்துக்கு பல்வேறு நகரங்களில் இருந்து வந்த 60 ஆயிரத்து 95 பேர் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டனர். இவர்களில் மொத்தம் 139 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

Next Story